Apple பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; ஐபோனில் இனி SIM கார்டு ஸ்லாட் இருக்காது

செய்தியின்படி, ஆப்பிள் (Apple) 2023 இல் அறிமுகப்படுத்தும் iPhone 15 இல் பிசிக்கல் சிம் கார்டு ஸ்லாட் இருக்காது, ஆனால் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களில் இ-சிம் வசதியை வழங்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2021, 09:34 AM IST
Apple பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி; ஐபோனில் இனி SIM கார்டு ஸ்லாட் இருக்காது title=

புதுடெல்லி: உலகின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களைப் பற்றி பேசினால், ஒருவேளை முதல் பெயர் ஆப்பிள் (Apple) தான் வரும். ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அதன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் புதிய மாடலை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி 2022 ஆம் ஆண்டில் iPhone 14 அறிமுகப்படுத்தப்படும், அதன் அம்சங்கள் குறித்து பல கசிவுகள் முன்னதாகவே வெளியானது. iPhone 14 உடன், தற்போது iPhone 15 பற்றிய செய்திகளும் பரவத் தொடங்கியுள்ளன. அதன்படி தற்போது ஒரு செய்தி ஒன்று வெளிவந்துள்ளது, இது ஆப்பிள் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்..

iPhone 15 இல் சிம் கார்டு ஸ்லாட் இல்லாமல் இருக்கலாம்
பிரேசிலிய இணையதளம் ஒன்றின் அறிக்கையின் படி, வரும் ஆண்டுகளில் ஆப்பிள் அதன் முதன்மை ஸ்மார்ட்போன்களான (Smartphone) ஐபோன்களில் இருந்து பிசிக்கல் சிம் கார்டு ஸ்லாட்டை நீக்கப் போகிறது என்று கூறுகிறது. அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவை சிம் கார்டு ஸ்லாட் இல்லாமல் வெளியிடப்படலாம்.

ALSO READ | இனி டிவியில் பார்க்கும் உணவுகளை நாவால் சுவைக்கலாம்!

சிம் கார்டு ஸ்லாட் இல்லாமல் எப்படி வேலை செய்யும்
சிம் கார்டு ஸ்லாட் இல்லாமல் ஐபோன் 15 இன் இந்த வகைகள் எவ்வாறு செயல்படும் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், இயற்பியல் சிம் கார்டு ஸ்லாட்டுகளுக்குப் பதிலாக, இ-சிம் கார்டுகள் அவற்றில் ஆதரிக்கப்படும். இரட்டை சிம் வசதிக்காக, இதில் பயனர்கள் தொலைபேசியில் இரண்டு இ-சிம் கார்டுகளின் ஆதரவைப் பெறுவார்கள்.

சில போன்களில் சிம் கார்டு ஸ்லாட் இருக்கும்
தற்போதைக்கு, நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லாததால், இந்த அறிக்கைகளை முழுமையாக நம்புவது தவறானது. மேலும், நிறுவனம் ஐபோன்களில் இருந்து சிம் கார்டு ஸ்லாட்களை நீக்கினாலும், இ-சிம் வசதி இல்லாத இடங்களில் பயனர்களை கவனித்துக் கொள்ள இந்த ஸ்லாட்களைக் கொண்ட மாடல்களையும் தயாரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆப்பிள் உண்மையில் அதன் 2023 iPhone 15 இல் இந்த மாற்றங்களைச் செய்யுமா அல்லது அது வதந்தியா என்பதை வரும் காலத்தில் தான் பார்க்க வேண்டும்.

ALSO READ | iPhone பிரியர்களுக்கு அட்டகாச செய்தி: iPhone 14 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News