முந்துங்கள்... BSNL-ன் கேஷ்பேக் சலுகை... மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பு...

அரசு பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகைகளை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது.

Updated: Jun 27, 2020, 07:18 AM IST
முந்துங்கள்... BSNL-ன் கேஷ்பேக் சலுகை... மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பு...
IMAGE FOR REPRESENTATION

அரசு பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகைகளை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது.

கொரோனா வைரஸ் இன்னல்களுக்கு மத்தியிலும் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது BSNL நிறுவனம். அந்த வகையில் சமீபத்தில் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகைகளை அறிவித்தது. இந்த கேஷ்பேக் சலுகைகளை தற்போது ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக நிறுவனம் நீட்டித்துள்ளது. அதாவது, பயனர்கள் இந்த கேஷ்பேக் சலுகை நன்மையை மேலும் சில நாட்களுக்கு அனுபவிக்கலாம். 

READ | ஜூலை 15 வரை சர்வதேச விமானங்கள் இயங்காது.. ஆனால் சில பாதைகளில் அரசு அனுமதிக்கலாம்...

இந்த அறிவிப்பின்படி லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் பயனர்களுக்கான 6 பைசா கேஷ்பேக் சலுகையின் செல்லுபடியை நிறுவனம் நீட்டித்துள்ளது. இந்த சலுகையின் பயனை ஜூன் 30 வரை வாடிக்கையாளர்கள் இப்போது பெறலாம். முன்னதாக இந்த சலுகையை நிறுவனம் 2019-ஆம் ஆண்டின் இறுதியில் திரும்பப் பெற்றது என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு, இதுவரை, நிறுவனம் இந்த சலுகையின் செல்லுபடியை பல மடங்கு அதிகரித்துள்ளது.

  • BSNL-ன் கேஷ்பேக் சலுகை என்றால் என்ன?

BSNL-ன் 6 பைசா கேஷ்பேக் சலுகை "5 பே 6" சலுகை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ், நிறுவனம் 5 நிமிடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட அழைப்புகளில் லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு 6 பைசா கேஷ்பேக் வழங்குகிறது.

இந்த சலுகையில், வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 50 ரூபாய் வரை கேஷ்பேக் பெறுவார்கள். இந்த சலுகையினை உங்கள் இணைப்பில் செயல்படுத்த BSNL லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் பயனர்கள் 9478053334 என்ற எண்ணுக்கு 'ACT 6'  என்ற செய்தியினை அனுப்ப வேண்டும். இது தவிர, கட்டணமில்லா எண் 18005991900-ஐ அழைப்பதன் மூலமும் இந்த சலுகையை செயல்படுத்த முடியும்.

READ | COVID-19 பெரும்பாலான குழந்தைகளுக்கு லேசான பாதிப்பை ஏற்படுத்துகிறது!

இதுதொடர்பான அறிவிப்பினை நிறுவனம் தனது ட்விட்டர் கைபிடிப்பில், வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. நிறுவனம் இந்த சலுகையினை கடந்த 2019 நவம்பரில் அறிமுகப்படுத்தியது. அப்போதிருந்து, நிறுவனம் இந்த சலுகையை அவ்வப்போது விரிவுபடுத்தி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பிடியில் மக்கள் தவித்து வரும் நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 வரை கேஷ்பேக் அளிக்கும் திட்டத்தினை நிறுவனம் செயல்படுத்தி வருவது வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.