ரூ.18000 இருந்தால் போதும்... உங்கள் ஐபோன் கனவு நனவாகும்... பிளிப்கார்ட் அளிக்கும் அதிரடி சலுகை

பண்டிகைக் காலம் வந்துவிட்டாலே,  வீட்டு உபயோகப் பொருட்கள், போன் முதல் கார்கள் வரை பல தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் கிடைக்கின்றன.  இந்நிலையில், உங்கள் ஐபோன் கனவை நனவாக்க சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 1, 2024, 09:32 AM IST
  • iPhone 14 வாங்கும் போது கிடைக்கும் வங்கிச் சலுகை விபரம்.
  • வீட்டு உபயோகப் பொருட்கள், போன் முதல் கார்கள் வரை பல தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
  • iPhone 14 வாங்குவதற்கான எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் விபரம்.
ரூ.18000 இருந்தால் போதும்... உங்கள் ஐபோன் கனவு நனவாகும்... பிளிப்கார்ட் அளிக்கும் அதிரடி சலுகை title=

பிளிப்கார்ட் சலுகை விற்பனை: பண்டிகைக் காலம் வந்துவிட்டாலே, வீட்டு உபயோகப் பொருட்கள், போன் முதல் கார்கள் வரை பல தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்நிலையில், உங்கள் ஐபோன் கனவை நனவாக்க சரியான வாய்ப்பு கிடைத்த்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 14 (128 ஜிபி) மாடல் போனுக்கு நல்ல சலுகையை பிளிப்கார்ட் வழங்குகிறது. இதனை நீங்கள் மிகவும் மலிவான விலையில் வாங்கலாம். ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், ஐபோன் 15, ஐபோன் 14 விலைகள் குறைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

iPhone 14 வாங்கும் கிடைக்கும் வங்கிச் சலுகை விபரம்

சலுகை விற்பனையில் ஐபோன் 14 (ப்ளூ, 128 ஜிபி) மாடலுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கிறது. ஐபோன் வாங்க 14% தள்ளுபடி கிடைக்கும். இதனை பிளிப்கார்ட்டில் இதனை ரூ. 59,900க்கு வாங்கலாம். HDFC வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், இந்த போனிற்கு கூடுதலாக ரூ.1,250 வரை தள்ளுபடி கிடைக்கும். EMI வசதியை பயன்படுத்தும் போது இந்த தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் இந்த போனை ரூ.49,749க்கு வாங்கலாம்.

iPhone 14 வாங்குவதற்கான எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.30,950 வரை தள்ளுபடி பெறலாம். இந்த வகையில் இந்த போனை வெறும் ரூ.18,799க்கு வாங்கலாம். ஆனால் நீங்கள் எக்சேஞ்ச் செய்யும் போன் லேட்டஸ்ட்டானதாக இருக்க வேண்டும் என்பதோடு, நல்ல நிலையில் சேதமடையாமல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ஐபோன் 16 மாடல்கள் வாங்க அம்பானி வழங்கும் அசத்தல் ஆஃபர்... மிஸ் பண்ணாதீங்க

ஐபோன் 14 சிறப்பு அம்சங்கள்

ஐபோன் 14 மாடலில் மிகவும் தரமான கேமரா உள்ளது. அதன் டிஸ்ப்ளே மிகவும் நன்றாக உள்ளது இந்த போனில் மிக வேகமாக இயங்கும் A15 பயோனிக் சிப் உள்ளது. இதன் பேட்டரி நீண்ட நேரம் நீடிக்கும் மற்றும் மிக நல்ல கிராபிக்ஸ் கொண்டது.

ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன்16 மாடல் போன்களை, அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ காம்ர்ஸ் தளங்களை தவிர, ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) தளத்திலும் வாங்கலாம். ஐபோன் 16 மாடல்களுக்கு வங்கி தள்ளுபடி தவிர, No-Cost EMI வசதியையும் பெறலாம்.

மேலும் படிக்க | சந்தையில் உலவும் டூப்ளிகேட் ஐபோன்கள்.... வாங்கும் போது எச்சரிக்கையாக இருங்க மக்களே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News