முடிவிற்கு வரும் பிளிப்கார்ட் ஆபர்கள்! டிவி, ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் அள்ளுங்கள்!

Flipkart Offers: ப்ளிப்கார்ட்டின் இந்த சலுகை கால விற்பனையில் ஐபோன் 13 உட்பட சாம்சங் கேலக்சி எஸ்21 எஃப்இ போன்ற இன்னும் பிற முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் கவர்ச்சிகரமான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.   

Written by - RK Spark | Last Updated : May 16, 2023, 12:07 PM IST
  • எஸ்பிஐ கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • கூகுள் பிக்சல் 6ஏ மொபைலை ரூ.25,499க்கு வாங்கலாம்.
  • ஐஎஃப்பி ஃப்ரண்ட் லோட் வாஷிங் மெஷினை ரூ.20,490க்கு வாங்கி கொள்ளலாம்.
முடிவிற்கு வரும் பிளிப்கார்ட் ஆபர்கள்! டிவி, ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் அள்ளுங்கள்! title=

Flipkart Offers: கோடைகாலத்தை குளிர்விக்க வைக்கும் வகையில் மிகப்பெரிய இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் மே 4ம் தேதி முதல் சலுகை கால விற்பனை தொடங்கியது.  இந்த விற்பனையில் பல்வேறு தயாரிப்புகளுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் ப்ளிப்கார்ட்டின் இந்த சலுகை இன்றுடன் முடிவடைகிறது.  கடந்த மே 10ம் தேதி நடைபெற்ற விற்பனையில் ப்ளிப்கார்ட் ஐபோன் 13க்கு சிறப்பான தள்ளுபடிகளை வழங்கியது.  ப்ளிப்கார்ட்டின் இந்த சலுகை கால விற்பனையில் ஐபோன் 13 உட்பட சாம்சங் கேலக்சி எஸ்21 எஃப்இ போன்ற இன்னும் பிற முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் கவர்ச்சிகரமான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.  ப்ளிப்கார்ட் சலுகையில் பாரத ஸ்டேட் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.  இது தவிர ப்ளிப்கார்ட் எக்ஸ்சேஞ் சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.  

மேலும் படிக்க | யூடியூப் போட்ட பக்கா பிளான்... இனி இதனை பயன்படுத்த முடியாது..

புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு ப்ளிப்கார்ட் விற்பனை சிறந்த தேர்வாக இருந்திருக்கும்.  இந்த விற்பனையில் ஐபோன் 13 பம்பர் சலுகையில் கிடைக்கிறது, நீங்கள் இந்த மொபைலை ரூ.56,749 வரை விலை கொடுத்து வாங்கலாம்.  இது தவிர, நீங்கள் சாம்சங் கேலக்சி எஸ்21 எஃப்இ மொபைலுக்கு சிறந்த சலுகைகளையும் பெற முடியும், இந்த ஸ்மார்ட்போனை ரூ.29,999க்கு வாங்கலாம்.  இந்த மொபைலில் உங்களுக்கு ப்ரோ கிரேடு கேமரா கிடைக்கிறது மற்றும் மொபைல் ஓஐஎஸ் ஆதரவுடன் வருகிறது.  ஸ்மார்ட்போனை தவணை முறையில் வாங்கி கொள்ளும் விருப்பமும் உங்களுக்கு வழங்கப்படுகிறது.  மாதந்தோறும் ரூ.4999 மாதாந்திர இஎம்ஐ செலுத்தி மொபைலை வாங்கி கொள்ளலாம்,  மேலும் ப்ளிப்கார்ட் விற்பனையில் கூகுள் பிக்சல் 6ஏ மொபைலை ரூ.25,499க்கு வாங்கலாம்.

ப்ளிப்கார்ட் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஸ்மார்ட் டிவி மற்றும் பிற உபகரணங்களை 75 சதவீதம் வரை தள்ளுபடியில் வாங்கலாம்.  தாம்சனின் 43 இன்ச் திரை அளவு கொண்ட 4K ஸ்மார்ட் டிவியை  ஃப்ளிப்கார்ட் விற்பனையில் வெறும் ரூ.16,189க்கு வாங்கலாம்.  அதே நேரத்தில் ரியல்மி நிறுவனத்தின் 40 இன்ச் திரை அளவு ஸ்மார்ட் டிவியை ரூ.15,299க்கு வாங்க முடியும்.  அடுத்ததாக சாம்சங்கின் 55 இன்ச் திரை அளவு கொண்ட 4K ஸ்மார்ட் டிவியை ரூ.38,249க்கு வாங்கிக்கொள்ளலாம்.  இதுதவிர ப்ளிப்கார்ட் வாஷிங் மெஷினுக்கும் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குகிறது.  இந்த விற்பனையில் இருந்து ஐஎஃப்பி ஃப்ரண்ட் லோட் வாஷிங் மெஷினை ரூ.20,490க்கு வாங்கி கொள்ளலாம்.  மறுபுறம், சாம்சங்கின் டாப் லோட் வாஷிங் மெஷினை ரூ.13,290க்கு வாங்கலாம்.   வேர்ல்ஃபூலின் டாப் லோட் வேரியன்ட் வாஷிங் மெஷினை ரூ.8,390க்கு வாங்கலாம்.

மேலும் படிக்க | 40,000 ரூபாய்க்குள் கிடைக்கும் அசத்தலான டாப் கிளாஸ் ஸ்மார்ட்போன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News