Trolls: சமூக ஊடகங்களில் அநாமதேய ட்ரோல்களை அகற்ற முயற்சி எடுக்கும் நாடு இது...

அநாமதேய ட்ரோல்களை அகற்றும் முயற்சியில், ஆஸ்திரேலியா புதிய சட்டங்களைக் கொண்டு வர உள்ளது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 28, 2021, 02:27 PM IST
  • தொடரும் ஆன்லைன் ட்ரோலிங்
  • மனரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தும் ட்ரொலிங்
  • ட்ரோலிங்கை கட்டுப்படுத்த சட்டம்
Trolls: சமூக ஊடகங்களில் அநாமதேய ட்ரோல்களை அகற்ற முயற்சி எடுக்கும் நாடு இது...   title=

சமூக ஊடகங்கள் பலருக்கும் இன்றும் மிகவும் உபயோகமானதாக இருந்தாலும்,  மன ஆரோக்கியத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. யார் என்றே தெரியாதவர்கள்கூட, மனதை பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

பெயர் தெரிவிக்காமலேயே ட்ரோலிங் செய்யும் வாய்ப்பு இருப்பதால், ட்ரோலிங் செய்யும் வழக்கம் மிகவும் பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், இப்போது பல நாடுகள் இந்தத் தடையை உடைக்க அனுமதிக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன, இதனால் ஆன்லைன் ட்ரோலிங் (online trolling) முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று நம்பப்படுகிறது.

ஆன்லைன் ட்ரோல்களின் சிக்கலைச் சமாளிக்க புதிய சட்டத்தை இயற்றுவது தொடர்பாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது. புதிய சட்டத்தின் கீழ், அவதூறான கருத்துக்களைப் பதிவு செய்யும் பயனர்களின் விவரங்களை சமூக ஊடக நிறுவனங்கள் (Social Media) அளிக்க வேண்டும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

"ஆன்லைன் உலகம் அநாமதேயமானதாக இருக்கக்கூடாது, அங்கு பிறருக்கு தீங்கு விளைவிப்பவர்கள், மதவெறியர்கள், காமுகர்கள் என பலரும் அநாமதேயமாக சுற்றித் திரிந்து மக்களுக்கு தீங்கு விளைவிக்கலாம்" என்று மோரிசன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ALSO READ | 'பச்சைக் கண்களை' கொண்ட ஆப்கன் பெண் மீண்டும் வைரல்

 "இது இன்றைய நிஜ உலகில் நடக்கக்கூடியது, அதிலும் டிஜிட்டல் உலகில் இது இயல்பானதாக இருக்கிறது" என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

'புகார் வழிமுறை' (Complaints mechanism) புதிய சட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும். எந்தவொரு சமூக ஊடக தளத்திலும் அவதூறு செய்யப்பட்டதாகவோ அல்லது கொடுமைப்படுத்தப்பட்டதாகவோ யாராவது நினைத்தால், அவர்கள் அந்த உள்ளடகத்தை நீக்கக் கோரும் உரிமையைப் பெறுவார்கள்.

டிஜிட்டல் தளங்கள், ஆன்லைன் நிறுவனங்கள், இந்த உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு முறையான செயல்முறைகளைக் கொண்டிருக்க வேண்டும்" என்று மோரிசன் கூறினார்.

"சமூக ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை உருவாக்கியுள்ளனர், அவர்கள் அதை பாதுகாப்பாக வைக்க வேண்டும், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால், இது போன்ற சட்டங்கள் மூலம் நாங்கள் அவற்றை கட்டுப்படுத்துவோம்" என்று மோரிசன் கூறுகிறார்.

ALSO READ | செக்ஸ் பொம்மையை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பாடிபில்டர்!

சமூக ஊடக நிறுவனங்களும் ஆஸ்திரேலியாவில் ஆன்லைன் வாடிக்கையாளர் கடை முகப்புகளை (customer shopfronts) அமைக்க வேண்டும். நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவர்கள் உத்தரவுகளுக்கு இணங்குவதை இது உறுதி செய்யும்.

இதற்கிடையில், இந்த மாத தொடக்கத்தில், பிரிட்டிஷ் அரசாங்கம் ஆன்லைன் துஷ்பிரயோகத்தை சமாளிக்க புதிய சட்டத்தை ஆய்வு செய்தது. இணைய "ட்ரோல்கள்" வார்த்தைகள் அல்லது "உளவியல் காயத்தை" ஏற்படுத்தும் பொருட்களுக்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ளக்கூடும்.

விளையாட்டுத்துறையில் இயங்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் பிரீமியர் லீக் விளையாட்டு வீரர்கள் சம்பந்தப்பட்ட உயர்மட்ட இணைய துஷ்பிரயோக வழக்குகளின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கலாசாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறையானது, "உளவியல் காயத்தின்" அடிப்படையில் குற்றங்களைச் செய்வது தொடர்பான சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது.

READ ALSO | Omicron பரவுகிறது! பயணக் கட்டுப்பாடுகள் அமல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News