SMS Blocking Tips: ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை என்னவென்று பார்த்தால், தினம் வரும் ஏகப்பட்ட எஸ்எம்எஸ் தான். அடிக்கடி நமது போனுக்கு பல எஸ்எம்எஸ் வருவதால், அதில் எது நமக்கு எது தேவையான செய்தி, தேவையில்லாத செய்தி என கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கல். அதுவும் டெலிமார்கெட் மற்றும் விளம்பரச் செய்திகள் தான் அதிகமாக வருகின்றன. இந்தச் செய்திகளுக்கு மத்தியில் ஏதேனும் முக்கியமான செய்தியைக் கண்டுபிடிக்கச் செல்லும்போது நமக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இதுபோன்ற ஸ்பேம் செய்திகள் உங்களை தொந்தரவு செய்தால், அவற்றை நிரந்தரமாகத் தடுக்கலாம். இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தொலைபேசிகளை பயன்படுத்துபவர்கள் "டிஎன்டி" (Do Not Disturb) என்ற வசதி குறித்து அறிந்திருப்பீர்கள். ஆனால் எத்தனை பேர் அதை சரியாக பயன்படுத்தி கொள்கிறோம் என்றால், மிகவும் குறைவு. இந்த நவீன உலகில், பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நமக்கு, நமக்குத் தெரியாத எண்களிடம் இருந்து வரும் தேவையில்லாத மெசேஸ் மற்றும் போன் கால்களை ஒவ்வொருமுறையும் ஒவ்வொன்றாக ப்ளாக் செய்வது என்பது ஆகாத காரியம். எனவே நீங்கள் விரும்பினால், உங்கள் போனுக்கு வரும் ஸ்பேம் செய்திகள் வருவதைத் தடுக்க டிஎன்டி வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: TRAI New Rules: குட் நியூஸ்!! இனி கம்மி விலையில் அதிக நேரம் டிவி பார்க்கலாம்!!
ஸ்பேம் எஸ்எம்எஸ் மற்றும் போலி போன் அழைப்புகளைத் தடுக்க உங்கள் மொபைலில் டிஎன்டி அம்சத்தை செயல்படுத்தலாம். இதைச் செய்ய, உங்கள் தொலைபேசியின் மெசேஸ் செயலியை ஓபன் செய்து, புதிதாக மெசேஜ் ஒன்றை உருவாக்கி, அதில் START 0 என்று டைப் செய்ய வேண்டும். பின்னர் 1909 க்கு எஸ்.எம்.எஸ் செய்யவும். நீங்கள் செய்தியை அனுப்பியவுடன், பதில் எஸ்.எம்.எஸ் மூலம் அது உறுதிப்படுத்தப்படும். இதேபோல், உங்கள் தொலைபேசியிலிருந்து 1909 ஐ டயல் செய்தும் DND வசதியை ஆக்டிவேட் செய்ய முடியும்.
நீங்கள் விரும்பினால், ஸ்பேம் செய்திகளைத் தடுக்க, ட்ராய் (TRAI) ஆணையம் வெளியிட்டுள்ள DND செயலியை பயன்படுத்தலாம். தற்போது, ட்ராய் DND 3.0 செயலி ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஸ்பேம் செய்திகள் மற்றும் அழைப்புகளைத் தடுக்க, Google Play Store இலிருந்து TRAI DND 3.0 பயன்பாட்டை பதிவிறக்கும் செய்தபின், சில அனுமதிகளை உங்களிடம் கேட்கும். அனுமதி அளித்த பிறகு உங்கள் மொபைல் எண்ணுடன் பதிவு செய்யவேண்டும். இதன் மூலமாகவும் தேவையில்லைதா மெசேஸ் மற்றும் கால்களை ப்ளாக் செய்யலாம். தேவையற்ற வணிகச் செய்திகளைத் தடுப்பதற்கு ட்ராய் DND செயலி பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க: நம்ப முடியாத விலையில் ஐபோன் 12: பிளிப்கார்டில் அதிரடி தள்ளுபடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ