ஜியோவின் அசத்தல் திட்டம்: 84 நாட்களுக்கு அன்லிமிடட் காலிங், ஹை ஸ்பீட் இணையம்

Jio Recharge Plan: இந்த அசத்தலான திட்டத்தின் விவரங்கள் என்ன? இதில் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 5, 2022, 02:40 PM IST
  • ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்கள் வாடிக்கையாளர்களிடையே மிகவும் விரும்பப்படுகின்றன.
  • ஒரு முறை சார்ஜ் செய்தால், 3 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.
  • ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்: இதன் விவரம் என்ன?
ஜியோவின் அசத்தல் திட்டம்: 84 நாட்களுக்கு அன்லிமிடட் காலிங், ஹை ஸ்பீட் இணையம் title=

ஜியோ ரீசார்ஜ் திட்டம்: ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்கள் வாடிக்கையாளர்களிடையே மிகவும் விரும்பப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம், இவை சிக்கனமாக இருப்பதும், மிகவும் வலுவான பலன்களைத் தருவதும்தான். நீங்களும் அட்டகாசமான பலன்களையும் சலுகைகளையும் பெற விரும்பினால், ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்வதில் இருந்து விடுபட விரும்பினால், உங்களுக்கான ஜியோவின் நல்ல ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால், 3 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. இந்த திட்டத்தின் விவரங்கள் என்ன? இதில் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம். 

ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்: இதன் விவரம் என்ன?

இந்த பதிவில் நாம் ஆராயும் ஜியோ திட்டத்தின் விலை ரூ. 719 ஆகும். இதை ஒரு முறை ஆக்டிவேட் செய்தவுடன், அடுத்த 3 மாதங்களுக்கு அதாவது 84 நாட்களுக்கு நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. இந்த ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் செயல்படுத்தியதும், அதாவது ஆக்டிவேட் செய்தவுடன், திட்டம் திடீரென முடிவடைந்து விடுமோ என்ற பதற்றம் உங்களுக்கு இருக்காது. பயனர்கள் அன்லிமிடெட் காலிங் மற்றும் நல்ல வேகத்தில் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெறலாம். 

மேலும் படிக்க | ஏர்டெல் பம்பர் ஆஃபர்... நெட்ஃபிலிக்ஸ், அமேசான், டிஸ்னி+ஹாட்ஸ்டார் இலவசம்

இந்தத் திட்டத்தில் என்னென்ன நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன

இந்தத் திட்டத்தில் பலவித நன்மைகள் கிடைக்கின்றன. ரூ. 719-க்கான இந்தத் திட்டத்தில், முதலில் 84 நாட்களுக்கான வேலிடிட்டி கிடைக்கிறது. இதனுடன் பயனர்கள் மொத்தம் 168 ஜிபி டேட்டாவைப் பெறலாம். இதன் காரணமாக பயனர்கள் இடையூறு இல்லாமல் இணையத்தைப் பயன்படுத்தலாம். இந்த இணைய வசதி ஒரு நாளைக்கு 2 ஜிபி கிடைக்கும். 

இந்தத் திட்டத்தில் நீங்கள் 3 மாதங்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் காலிங் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இதனுடன் நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் வசதியும் கிடைக்கும். இந்த நன்மைகளுடன் கூடுதலாக, JioTV, JioCinema மற்றும் JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்ட பல ஜியோ செயலிகளின் சந்தாவையும் பயனர்கள் இதில் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | செப்டம்பரில் மட்டும் 26 லட்சம் அக்கவுண்ட்ஸ் ப்ளாக் - வாட்ஸ் அப் வெளியிட்ட தகவல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News