Jio Vs Vi Vs Airtel: 4G வேகத்தில் யார் பெஸ்ட்; TRAI கூறுவது என்ன

ஜூன் 8 அன்று தொலைத் தொடர்பு கட்டுபபட்டு நிறுவனம் (TRAI) வெளியிட்ட தரவுகளின்படி, ஏர்டெல்லின் சராசரி வேகம் 4.7 MBPS.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 17, 2021, 08:50 AM IST
  • 2018 ஆகஸ்ட் மாதத்தில் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் இணைந்தது.
  • பதிவேற்ற வேகம் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் விரைவாக பகிர உதவுகிறது
Jio Vs Vi Vs Airtel: 4G வேகத்தில் யார் பெஸ்ட்; TRAI கூறுவது என்ன title=

புதுடெல்லி: தொலைத் தொடர்பு கட்டுபபட்டு நிறுவனம் (TRAI) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, மே மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ சராசரியாக வினாடிக்கு 20.7 மெகாபைட் (Megabyte per second- MBPS) பதிவிறக்க வேகத்துடன்(Download Speed)  4G பிரிவில் முதலிடம் பிடித்தது. அதேசமயம், பதிவேற்றம் பிரிவில் வோடபோன் ஐடியா (VI) 6.7 MBPS தரவு வேகத்துடன் முன்னிலையில் இருந்தது.

VI வோடபோனை விட Jio வேகம் 3 மடங்கு அதிகம்

தொலைத் தொடர்பு கட்டுபபட்டு நிறுவனம் (TRAI) வெளியிட்ட தரவுகளின்படி, ரிலையன்ஸ் ஜியோ 4G நெட்வொர்க்கின் வேகம் அதிகரித்துள்ளது. இதன் போட்டியாளரான வோடபோன் ஐடியா (VI)  நிறுவனத்துடன் ஒப்பிடும் போது, அதன் இணைய வேகம் மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. ரிலையன்ஸ் ஜியோ பதிவிறக்க வேகம்  20.7. MBPS. வோடபோன் ஐடியாவின் சராசரி பதிவிறக்க வேகம் 6.3 MBPS. 2018 ஆகஸ்ட் மாதத்தில் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் இணைந்தது. 

ALSO READ | Best Broadband Plans: 100Mbps வேகம், வரம்பற்ற தரவுடன் கிடைக்கும் அசத்தலான திட்டங்கள்

மூன்றாம் இடத்தில் ஏர்டெல்

ஜூன் 8 அன்று தொலைத் தொடர்பு கட்டுபபட்டு நிறுவனம் (TRAI) வெளியிட்ட தரவுகளின்படி, ஏர்டெல்லின் சராசரி வேகம் 4.7 MBPS. பதிவிறக்க வேகம் (Download Speed) வாடிக்கையாளர்கள் இணையத்திலிருந்து உள்ளடக்கத்தை எவ்வளவு வேகமாக அணுக உதவுகிறது என்பதை குறிக்கிறது, பதிவேற்ற வேகம் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிர உதவுகிறது.

BSNL  வழங்கும் இணைய வேகம் குறித்த தகவல் அட்டவணையில் இல்லை

அன்று தொலைத் தொடர்பு கட்டுபபட்டு நிறுவனம் (TRAI) வெளியிட்ட தரவுகளின்படி, வோடபோன் ஐடியா மே மாதத்தில் சராசரியாக பதிவேற்றும் வேகம் (Upload Spees) 6.3 MBPS. இதற்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜியோவின் பதிவேற்ற வேகம் 4.2 MBPS மற்றும் பாரதி ஏர்டெல்லின் வேகம் 3.6 MBPS. அரசு நிறுவனமான BSNL சில குறிப்பிட்ட பகுதிகளில் 4G  சேவையைத் தொடங்கியுள்ளது, ஆனால் அதன் இணைய வேகம் குறித்த விபரம் TRAI வெளியிட்ட அட்டவணையில் இல்லை.

ALSO READ | Jio Fiber அசத்தல் சலுகை: புதிய திட்டத்தில் இவை அனைத்தும் இலவசம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News