கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்கள் நிறுவனம் வளர்சிக்காக வங்கிகள் முலம் கடனை பெறுகின்றன. சில சமயம் அதிகபடியான தொகையை வங்கிகளிடம் பெற்றுக்கொள்கின்றன. இதன்முலம் வங்கிகள் ஆபத்துகளை சந்திக்க நேர்கின்றன. மேலும் வங்கிகளும் லாப நோக்கத்திற்காக அதிகளவிலான நிதித் தொகையைக் கடனாகக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்து வருகிறது.
ரிசர்வ் வங்கி இதை கருத்தில் கொண்டு ஆபத்துகளைக் குறைக்கும் வகையில் புதிய விதிமுறையை கொண்டு வர உள்ளது. இப்புதிய விதிமுறை அடுத்த நிதியாண்டு நடைமுறை படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் அனைத்து இந்திய வங்கிகளுக்கும் இப்புதிய விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.