Realme 10 Pro Plus, Realme 10 Pro 5G: உலகளாவிய தொழில்நுட்ப பிராண்டான ரியல்மீ, இந்தியாவில் Realme 10 Pro 5G மற்றும் Realme 10 Pro Plus 5G ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரியல்மீ 10 ப்ரோ பிளஸ் 5ஜி, மீடியாடெக் டைமென்சிடி 1080 சிப்செட் மற்றும் 108எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் வளைந்த எட்ஜ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ரியல்மி 10 ப்ரோ மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் இரண்டும் நைட் பிளாக், ஸ்டார்லைட் மற்றும் சீ ப்ளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.
Realme 10 Pro Plus, Realme 10 Pro 5G விலை
ரியல்மீயின் Realme 10 Pro Plus 6GB RAM + 128GB சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.24,999 ஆகும். 8GB RAM+128GB இன் விலை ரூ.25,999 ஆகும். அறிமுகச் சலுகையாக, வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட்டில் ரூ.1,000 தள்ளுபடி பெறலாம். இது இந்தியாவில் டிசம்பர் 14 ஆம் தேதி இந்திய நேரத்தில் மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும்.
மறுபுறம், Realme 10 Pro 5G 6GB RAM + 128GB சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ. 18,999 ஆகும். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.19,999. Realme 10 Pro 5Gயில் (6GB+128GB) வங்கிச் சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.1,000 தள்ளுபடி பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட்டில் டிசம்பர் 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும்.
மேலும் படிக்க | Jio vs Vodafone Idea? ரூ249 ரீசார்ஜ் திட்டம், எது பெஸ்ட்
Realme 10 Pro Plus 5G, Realme 10 Pro 5G: விவரக்குறிப்புகள்
Realme 10 Pro+ போனில் 6.7 இன்ச் வளைந்த அமோல்ட் டிஸ்ப்ளேவுடன் 120Hz புதுப்பிப்பு வீதமும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிடி 1080 SoC மூலம் 12GB வரை LPDDR4x ரேம் மற்றும் 256GB UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
Realme 10 Pro Plus 5G ஆனது 108MP பிரதான லென்ஸ், 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. சாதனம் 30fps இல் 4K வீடியோ பதிவு ஆதரவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16MP சிங்கிள் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போன் 5,000mAh வேகமான 67W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் கிடைக்கிறது. இந்த சாதனம் Realme UI 4.0 இல் இயங்குகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 13 OS இதில் ப்ரீ-லோட் செய்யப்பட்டுள்ளது.
மறுபுறம், Realme 10 Pro 5G ஆனது முழு-HD+ தெளிவுத்திறனுடன் 6.7-இன்ச் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய பிளாட் எல்சிடி பேனல் ஆகும். இது Qualcomm Snapdragon 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 108MP பிரதான லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்க 16எம்பி கேமரா உள்ளது. சாதனம் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது Realme UI 4.0 இல் பூட் ஆகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இதில் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ