செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்படும் செய்திகளை அடையாளம் காணும் யூடியூப் தொழில்நுட்பம்!

Youtube Content Protection From Deepfake : செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், செயற்கையாக உள்ளடக்கத்தை உருவாக்கி பயன்படுத்துபவர்களுக்கு சவால் விடும் யூடியூப் தளத்தின் புதிய கருவிகள்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 7, 2024, 11:27 PM IST
  • யூடியூப் முகத்தை கண்டறியும் கருவி
  • செயற்கை பாடும் கருவி
  • செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்படும் செய்திகளை அடையாளம் காணும் யூடியூப் தொழில்நுட்பம்! title=

YouTube இன் முகம் கண்டறிதல் மற்றும் செயற்கை-பாடல் கண்டறிதல் கருவிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும். கிரியேட்டர்கள் தங்கள் உள்ளடக்கத்தை டீப்ஃபேக் (Deepfake) பிரசச்னையில் இருந்து பாதுகாக்க உதவும் கருவிகளை YouTube அறிவித்துள்ளது.

ஒரு நபரின் குரல் அல்லது முகத்தைப் பயன்படுத்தி AI-உருவாக்கிய உள்ளடக்கத்தைக் கண்டறியும் புதிய கருவிகளை யூடியூப் அறிமுகம் செய்திருக்கிறது. AI-உருவாக்கிய முகம் அல்லது குரலைப் பயன்படுத்தும் உள்ளடக்கத்தை அடையாளம் காண முகத்தைக் கண்டறியும் கருவி உதவும். இதேபோல், செயற்கை பாடும் அடையாள தொழில்நுட்பமானது, AI-உருவாக்கிய பாடும் குரல்களைப் பயன்படுத்தும் உள்ளடக்கத்தைக் கண்டறிய உதவும்.

டீப்ஃபேக்

AI-உருவாக்கிய டீப்ஃபேக் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதை YouTube கட்டுப்படுத்த முடியும் என்பது பலருக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. இவை யூடியூப்பின் வரவிருக்கும் அம்சங்கள் என்றாலும், பலருக்கும் போலியை கண்டறிய முடியும் என்பதால், மோசடி செய்பவர்களுக்கு இனி கஷ்டகாலம் தான்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு 3%-4% டிஏ ஹைக்: இந்த நாளில் அறிவிப்பு.. ஊதிய உயர்வுடன் டிஏ அரியரும் கிடைக்கும்

முகம் கண்டறிதல் மற்றும் செயற்கையாகப் பாடும் அடையாளங்காட்டி, டீப்ஃபேக் வீடியோவில் யாருடைய முகத்தையும் குரலையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதில் படைப்பாளிகளுக்கு அதிக சுதந்திரம் கிடைக்கும். கடந்த காலங்களில், விசித்திரமான வேடிக்கையான காட்சிகளில் பிரபலங்களின் செயற்கை குரல்களைப் பயன்படுத்துவதை பார்த்திருக்கிறோம்.

அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், மறைந்த பிரபல தலைவர்களின் குரலில், அவர்கள் மக்களிடம் வாக்கு கேட்டதை நினைவுபடுத்தி பார்க்கலாம்.

யூடியூப் சேனல்கள்

இது யூடியூப் தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். நூற்றுக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் உள்ளடக்கத்தை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தயாரிக்கின்றன. யூடியூப் குழுவால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை அடையாளக் கருவி மற்றும், இப்போது உருவாக்கப்பட்டு வரும் முகத்தை கண்டறியும் கருவி இரண்டுமே உள்ளடகத்தை பாதுகாக்கும்.

இந்த கருவிகள், யூடியூப் பிளாட்ஃபார்மில் தங்கள் உள்ளடக்கம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை சிறந்த கட்டுப்பாட்டுடன் படைப்பாளர்களுக்கு வழங்குவதற்கான ஒரு முயற்சி என்று யூடியூப் துணைத் தலைவர், அம்ஜத் ஹனிஃப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வலைப்பதிவு இடுகை வெளியிட்ட யூடியூப் துணைத் தலைவர், அம்ஜத் ஹனிஃப், AI மாதிரியைப் பயிற்றுவிப்பதற்கான தளத்திலிருந்து எந்தவொரு படைப்பாளரின் உள்ளடக்கத்தையும் அகற்றுவது YouTube இன் சேவை விதிமுறைகளை நேரடியாக மீறுவதாகும். என்றாலும்கூட, AI மாதிரி பயிற்சிக்காக மூன்றாம் தரப்பினர் தங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்த அனுமதிக்க படைப்பாளர்களுக்கு அதிகாரம் இருக்கும் என்று தெரிவித்தார்.

AI-உருவாக்கிய உள்ளடக்கம் இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும். AI உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்த எல்லா இடங்களிலும் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வாட்ஸ்அப் வெறும் செய்தி அனுப்பும் செயலி மட்டுமா? மொபைலுடன் ஒன்றிவிட்ட whatsapp அம்சங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News