#Sterlite காவல்துறையினருக்கு செக் வைத்த உயர்நீதிமன்ற கிளை!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டோரின் குடும்பத்துக்கு தொல்லை தரக்கூடாது என காவல்துறையினருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு! 

Last Updated : Jun 1, 2018, 01:40 PM IST
#Sterlite காவல்துறையினருக்கு செக் வைத்த உயர்நீதிமன்ற கிளை!  title=

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டோரின் குடும்பத்துக்கு தொல்லை தரக்கூடாது என காவல்துறையினருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு! 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த 'மக்கள் அதிகாரம்' அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கப்பாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் போலீசார் விசாரணை என்ற பெயரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை இரவு, பகல் என்று எப்போதும் தொல்லை செய்கிறார்கள். மேலும் வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகளையும் அழைத்து சென்று விசாரணை நடத்துகிறார்கள் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "இனி போலீசார் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது" என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான மற்றுமொரு மனு மீதான விசாரணையில் நீதிமன்றம், "எந்த அடிப்படையில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பி உள்ளது!

 

Trending News