சாம்பியன்ஸ் டிராபி 2017 கிரிக்கெட்டில் லீக் சுற்றுக்கான ஆட்டம் இன்றுடன் நிறைவடைகிறது.
கார்டிப்பில் இன்று நடக்க இருக்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கையும், பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதுகின்றன.
தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் 96 ரன் வித்தியாசத்தில் தோற்ற இலங்கை அணி அடுத்து இந்தியாவிடம் 322 ரன்களை எடுத்து சாதனை படைத்தது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். இதனால் இரு அணி வீரர்களும் களத்தில் வரிந்து கட்டி நிற்பார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி பி பிரிவு லீக் ஆட்டத்தில் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.
பர்மிங்காம் நகரில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்யை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.
சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் அணியின் ஹாசன் அலி 3, ஜூனைட் கான், இமாத் வாசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக மில்லர் 75 ரன்களை எடுத்தார்.
இந்திய - ரஷியா இடேயான உறவு நிலையா உறவாகும். இந்த உறவுகளை நீர்த்துப் போகச் செய்ய முடியாது.
பாகிஸ்தானுடன் வலுவான ராணுவ உறவுகளை ரஷியா கொண்டிருக்கவில்லை. இந்தியா - ரஷியா இடையிலான வர்த்தக உறவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி அதைத் தொடர்ந்து ரஷியா சென்றடைந்தார். அதிபர் விளாதிமீர் புதினின் சொந்த நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அவருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிம்பெர் மற்றும் பட்டால் செக்டாரி அத்து மீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் நவ்சேரா பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிம்பர் மற்றும் பட்டால் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில், பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் முகாம்களும் சேதமடைந்துள்ளன.
இந்தியாவில் 21 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் உத்தரவின் பேரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 21 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் இந்திய மாநிலங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும், அதேவேளையில் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முக்கியமாக டெல்லி, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஒரு மரண தேசம் என்று அங்கிருந்து தாயகம் திரும்பிய இந்தியப் பெண் கண்ணீருடன் தெரிவித்தார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர், துப்பாக்கி முனையில் மிரட்டி தன்னைத் திருமணம் செய்து கொண்டதாகப் புகார் தெரிவித்த அந்தப் பெண் வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்தார்.
எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் எப்பொழுதும் பதற்றம் நீடித்து வருகிறது.
இதனை கண்காணிக்க எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஐ.நா. ராணுவ குழுவின் வாகனம் நிறுத்த பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவம் ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழுவின் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது என பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டது. இதைக்குறித்து பாகிஸ்தான் ஐ.நா.சபையில் இந்தியாவிற்கு எதிராக குற்றச்சாட்டியது.
ஆனால் ஐ.நா. சபை இந்த குற்றச்சாட்டில் உண்மை கிடையாது என கூறி நிராகரித்துவிட்டது.
டெல்லியை சேர்ந்த இளம் பெண் டாக்டர் உஸ்மா பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தை சேர்ந்த தாகிர் அலியை மலேசியா சென்றபோது காதலித்தார்.
இவர் கடந்த 1-ம் தேதி வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றார். இருவருக்கும் திருமணம் நடந்து உள்ளது. இதனையடுத்து இந்திய தூதரகத்தை நாடிய உஸ்மா தன்னுடைய நிலை குறித்து எடுத்துரைத்து, இந்தியாவிற்கு செல்ல விருப்பம் தெரிவித்தார். தூதரகம் உதவியுடன் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டை நாடிய உஸ்மா,
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், போதிய பயண ஆவணங்கள் இல்லை எனக் கூறி சாலையில் நடந்து சென்ற இந்தியர் ஒருவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் சிறையில் அடைத்துள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் மும்பையை சேர்ந்த செயிக் நபி அகமது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தல் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்குகியது.
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி கைது செய்தது. பிறகு அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தல் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி கைது செய்தது. பிறகு அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
ஜம்மு - காஷ்மீரில் பாலாகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 1700 பேர் பத்திரமான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இது தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது:-
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாகுதலையொட்டி இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் அண்மையில் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் உடல்களையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிதைத்தனர். இச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
காஷ்மீரின் எல்லைக் கோட்டை ஒட்டிய பகுதிகயில் அமைந்துள்ள நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் நவ்சேரா பகுதியில் பொது மக்கள் 2 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர்.
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்சேரா பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகள், இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு இந்திய படைகளும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றன.
பாகிஸ்தானில் மசூதி அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியாகினர். 38 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் நாடாளுமன்ற துணை சபாநாயகரும் காயமடைந்தார். இந்த குண்டு வெடிப்பு சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் வெடித்துள்ளது.
காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தான் நபர் என்னை மிரட்டினர் கல்யாணம் செய்து கொண்டார் டெல்லியை சேர்ந்த இளம் பெண் பரபரப்பு புகார்.
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தை சேர்ந்தவர் தாகிர் அலி மற்றும் டெல்லியை சேர்ந்த இளம் பெண் டாக்டர் உஸ்மா (வயது 20). இருவரும் மலேசியாவில் சந்தித்துள்ளனர்.
பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பதுங்கு குழிகளை, இந்திய ராணுவம் ஏவுகணை வீசி தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த தாக்குதல் எப்போது நடத்தப்பட்டது என தெரியவில்லை. ஆனால் கடந்த வாரம் 2 இந்திய பாதுகாப்பு படை வீரர்களை கொன்று, அவர்களின் உடலை பாக்., கொடூரமாக சிதைத்ததற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மும்பை - கராச்சி இடையேயான விமான போக்குவரத்து சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு வியாழக்கிழமையும், பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் மும்பைக்கும் இடையேயான விமான சேவையை மேற்கொண்டு வந்தது. இச்சேவை இன்று முதல் நிறுத்தப்படுகிறது என பாகிஸ்தான் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ராணுவத்திற்கு எதிராக மக்களை தூண்டும் விதமாக விமர்சனம் செய்கிறார் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரை இஸ்தியாக் அஹமத் மிர்சா என்ற வழக்கறிஞர் ராவல்பிண்டியில் உள்ள ஒரு போலீஸ் நிலையதில் பாகிஸ்தான் பிரதமர் மீது கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் கூறப்பட்டது:-
நவாஸ், ராணுவத்திற்கு எதிராக மக்களை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இது வாட்ஸ் ஆப்பில் எனக்கு வந்துள்ளது. இதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக புகாரில் கூறியுள்ளார்.
காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் கடந்த மே 1-ம் தேதி இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது 2 இந்திய பாதுகாப்பு எல்லைச்சாவடிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் திடீரென தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் உயிரிழந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.