இந்தியாவின் பிரதமரான மோடி மற்றும் பாஜக கட்சி மக்கள் மத்தியில் மிக செல்வாக்கு அதிகரித்து வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். இதனையடுத்து, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு அடுத்த மாதம் 8-ம் தேதியுடன் ஒராண்டுகள் நிறைவடைய உள்ளன.
விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜிஎஸ்டி குறித்த வசனத்தால் தற்போது பெறும் சர்ச்சை ஆகி வருகிறது.
தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் 100-வது படமாக நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவந்த படம் மெர்சல். பல தடைகளுக்கு பிறகு இந்த படம் திரைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இதில் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி பற்றியும், டிஜிட்டல் இந்தியா திட்ட செயல்பாடுகளைப் பற்றியும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
தாவூத் இப்ராஹிமை வைத்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்ச்சி செய்கிறது என நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரே கூறியுள்ளார்.
நவ்நிர்மான் சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தை துவங்கி வைத்த அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்ரே கூறியதாவது,
தாவூத் இப்ராஹிமை வைத்து அரசியல் ஆதாயம் தேட பாஜக அரசு முயற்சி செய்கிறது. மிகவும் நோய்வாய்ப்பட்டு மோசமான உடல் நிலையில் இருக்கும் தாவூத் இப்ராஹிம், தனது கடைசி நாட்களை இந்தியாவில் கழிக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதை தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக பாஜக-வினர் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் எனக் கூறினார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அவரை மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா கூறியதாவது:
மணி விழாவுக்கு அனைத்து தலைவர்களையும் அழைத்து வருகிறேன். அந்த வகையில் மணி விழா அழைப்பிதழை கொடுக்கவே மு.க ஸ்டாலினை சந்தித்தேன். இதில் எந்தவித அரசியலும் இல்லை. அரசியலை பற்றி பேசவும் இல்லை. மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரிடம் நலம் விசாரித்தேன் என்று கூறினார்.
ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்கியது.
அதில், இந்திய அரசியல் சாசனத்தின்படி, தனி மனித ரகசியம் காப்பது என்பது அடிப்படை உரிமையே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பாஜக ஆளும் மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
இந்த சந்திப்பின் போது, வளர்ச்சி, சமூக நலப்பணிகள் மற்றும் 2019 மக்களவை தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
13 முதல் அமைச்சர்கள் மற்றும் 6 துணை முதல் அமைச்சர் சில அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மக்களவை தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் கைப்பற்ற வேண்டும் என்பது குறித்து மோடியும், அமித்ஷாவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தளம் முத்த தலைவர் நிதிஷ் குமார் கட்சிக்கு புறம்பான செயல்கள் செய்தோர் என் 21 நபர்களை இடைக்கால நீக்கம் செய்துள்ளார்.
ஏ.என்.ஐ அறிக்கையின்படி, மாநில தலைவர் வசித்த நாராயணன் இந்த 21 நபர்களையும் கட்சிக்கு புறம்பான செயல்கள் செய்ததாக கூறி இடைக்கால நீக்கம் செய்துள்ளார்.
இப்படியலில் முத்த தலைவர்கள் ரமாய் ராம், அர்ஜுன் ராய், ராஜ்கிஷோர் சின்ஹா ஆகியோரும் அடங்குவர்.
சரத் யாதவிற்கு பாஜகவுடனான கூட்டணியை ஏற்கவில்லை என்றால் காட்சியில் இருந்து வெளியேறலாம் எனவும், நீங்கள் விரும்பும் கூட்டணிக்கு செல்லலாம் என பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
கடந்த மாதம் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதீஷ் குமார் ராஜினாமா செய்தார், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜாஷ்வி யாதவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறி, ஜே.டி.யு. மற்றும் ஆர்.ஜே.டி இடையே இருந்த பெரும் கூட்டணியை கலைத்தார். கூட்டணியை கலைத்த சில மணி நேரத்திற்குள் நிதீஷ் பழைய கூட்டாளியான பி.ஜே.பி உடன் புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சர் பதவி ஏற்றார்.
இந்திய நாட்டின் 13வது துணை குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு வெற்றிபெற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி அவர்களின் பதவிக் காலம் வரும் 10-ம் தேதி முடிவடைம் நிலையில். இப்பதவிக்கான வேட்பாளர்களாக பாஜக சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தியும் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியிடப்பட்டது. அதன்படி 272 வாக்குகள் வித்தியாசத்தில் துணை குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நேற்று குஜராத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று ராஜஸ்தானில் வெள்ள பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிட்ட ராகுல் காந்தி, பின்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட வந்த அவரின் கார் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் பெரும் கண்டனத்துக்குறியது என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது துணை குடியரசுத்தலைவராக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், குடியரசு துணை தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கய்யா நாயுடுவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிடுகிறார்கள்.
இதற்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இன்று மாலை 7 மணிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நாளை காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.
தற்போது துணை குடியரசுத்தலைவராக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், குடியரசு துணை தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கய்யா நாயுடுவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிடுகிறார்கள்.
இதற்கான தேர்தல் நாளை காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 7 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தின் பா.ஜ.க. மூத்த தலைவர் பி.பி.ஷிவப்பா இன்று காலமானார்.
88 வயதான பி.பி.ஷிவப்பா உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிர் துறந்தார்.
ஷிவப்பாவின் மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று பீகார் மாநில முதல்வராக தவியேற்ற நிதிஷ் குமார், பிரதமருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இன்று பீகார் மாநில முதல்வராக மீண்டும் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வராக பாஜகவின் சுசில் குமார் மோடி பதவியேற்றனர். இவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பீகார் மாநில முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார், வாழ்த்துக்கள் கூறிய பிரதமருக்கு தனது நன்றிகளை தெரிவித்தார். ஊழல் விவகாரத்தில் எந்தவித சமரசமும் இல்லை. மத்திய அரசின் ஒத்துழைப்புடன் நிச்சயமாக பீகார் மாநிலத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம் என அவர் கூறினார்.
பீகார் மாநில முதல்வராக இன்று மீண்டும் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வராக பாஜகவின் சுசில் குமார் மோடி பதவியேற்றனர்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரான நிதிஷ் குமார் பீகார் மாநிலத்தின் முதல்வராக நீடித்து வந்தார். துணை முதல்வராக லாலுவின் மகன் தேஜஸ்வி இருந்து வந்தார்.
என்னால் ஊழலைப் பொறுக்க முடிய வில்லை அதனால்தான் நான் ராஜினாமா செய்தேன் என்று என்று நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
லாலு குடும்பத்துக்கும் - நிதீஷுக்கும் இடையிலான மோதலின் காரணாமாக நிதீஷ் குமாரும், அவரது கட்சி அமைச்சர்களும் அதிரடியாக பதவிகளை ராஜினாமா செய்தனர்.
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதீஷ்குமார், ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுயது:-
பீகார் முதல்வராக நிதிஷ்குமார் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றார். நிதிஷ் மற்றும் சுஷில் மோடி இருவர் மட்டுமே இன்று பதவியேற்ப்பு. பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ள கவர்னர், நிதிஷ் குமார் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 2 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.
பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் மாநில முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் திரிபாதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர், இந்திய நாட்டின் 14-வது குடியரசு தலைவராகிறார்.
522 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்டிஏ வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சிக்கு 22 எம்.பிக்கள் வாக்களித்தனர். 21 பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர், இந்திய நாட்டின் 14-வது குடியரசு தலைவராகிறார்.
மொத்தமுள்ள 10,98,882 வாக்குகளில் 7,02,644 லட்சத்துக்கு மேல் வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். தே.ஜ கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடுவுக்கு வந்த நிலையில் இந்திய நாட்டின் 14வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.