கட்சி ஆரம்பிக்கவே தான் ரஜினிகாந்த் அவர்கள் நான் பச்சை தமிழன் என்று கூறுகிறார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,
வாழவைத்த தமிழகம் என்று கூறி வந்த ரஜினிகாந்த், தற்போது மட்டும் ஏன் நான் பச்சை தமிழன் என்று கூறுகிறார். அரசியலில் நுழைவதற்காக தான் இப்படி கூறுகிறார். தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும். கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் வராது, ஆனால் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு அரசியல் தலைவர்கள் மட்டும் வருவார்கள் என்றால் அது எப்படி நியாயமாகும்?
அதிமுக ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் அதிமுக என்ற பெயரில் பாஜக ஆட்சியே நடைபெறுகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், தமிழகத்தில் அதிமுக பெயரில் பாஜக ஆட்சியே நடைபெறுகிறது. அதிமுக ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளது. தமிழக எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளை சந்திக்க மறுக்கும் மோடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் எப்படி சந்திக்கிறார்? இதில் எந்த அரசியலும் இல்லை எனக்கூறுவதை எப்படி நம்புவது?
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து பாஜக ராஜ்ய சபை எம்பி சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டம், அடிப்படை உரிமைகள் முதலியவற்றைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவர் சினிமாவில் நடிப்பதே சிறந்தது. தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலுக்கு ரஜினிகாந்த் ஏற்றவர் அல்ல என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா பாஜக தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தலித் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றார். அங்கு உயர்தர ஓட்டலில் இருந்து இட்லி வாங்கி வரப்பட்டு உணவருந்தியுள்ளார். இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றன.
பாஜக-வுக்கு நல்லவர்கள் யார் வந்தாலும் அவர்களை ஏற்று கொள்வோம் என பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
தனியார் டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பிரச்னையை மோடி அரசு கட்டுப்படுத்தும்.
அரசியலுக்கு வருவது பற்றி ரஜினிகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும். நல்லவர்கள் யார் வந்தாலும் அவர்களை பாஜக ஏற்று கொள்வோம். மேலும் ரஜினிகாந்துக்காக பாஜக கதவுகள் திறந்தே இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக-வுடன் எப்போது கூட்டணி வைக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பாஜகவுடன் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து அறிவிப்போம் என தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வைர விழாவில் மதவாத கட்சிகளை அழைக்க மாட்டோம் என்று திமுக சார்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது, திமுகவிடம் அரசியல் நாகரிகம் கிடையாது. கருணாநிதியை வைத்து குறுகிய அரசியலை நடத்துகிறது திமுக. கருணாநிதியின் வைரவிழாவிற்கு அனைத்து கட்சியினரையும் அழைக்க வேண்டும். பாஜக மதவாத கட்சி என்று திமுகவினர் பரப்பி வருகிறார்கள். பாஜக மதவாத கட்சி என்றால் வாஜ்பாய் தலைமையிலான அரசில் ஏன் திமுக கூட்டணி வைத்தது? அப்போது பாஜக மதவாத கட்சி என்பது தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.
இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் தலைகளை துண்டித்து, உடல்களை சிதைத்துள்ள பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க திராணியற்ற அற்ற அரசாக பாஜக அரசு உள்ளது என கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
படை வீரர்களை பலிகொடுத்துவிட்டு பசுக்களை காப்பாற்றும் பயனற்ற ஆட்சி மத்தியில் இருப்பதாக சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக கூறியுள்ள அவர், தைகிரியம் இருந்தால் ஆட்சியை கலைத்துவிட்டு பொதுத்தேர்தல் நடத்த பாஜக தயாரா? எனவும் உத்தவ் தாக்ரே சாவல் விடுத்துள்ளார்.
டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியின் வீடு நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது மனோஜ் திவாரி தாக்குதலுக்கு உள்ளான வீட்டில் இல்லையென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் வட்டாரங்கள், திவாரிக்கு கீழ் பணி புரியும் ஒருவர் கார் விபத்து சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், எதிர் தரப்புக்கும் திவாரியின் பணியாளர் தரப்புக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதையடுத்து, எதிர்தரப்பினர் அவருடைய நண்பர்களுடன் திவாரியின் வீட்டை சூறையாடியுள்ளனர்.
இது குறித்து திவாரி அவரது டிவிட்டரில்:-
அதிமுக-வின் இரு அணிகளையும் வைத்தும் தமிழகத்தில் வளரும் அளவுக்கு பாஜக இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:-
காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது இந்தி பற்றி ஸ்டாலின் ஏன் கேட்கவில்லை, தமிழகத்தில் இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளை வைத்து வளரும் நிலை பாஜகவுக்கு கிடையாது.
கோடநாடு உள்ளிட்ட விவகாரங்களில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியது மாநில அரசின் கடமை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது. பாஜக அமோக வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 270 வார்டுகளில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியால் 48 இடங்களை தான் கைப்பற்ற முடிந்தது.
தேர்தல் தோல்வியால் கெஜ்ரிவால் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். மின்னணு வாக்கு எந்திரம் மீது குற்றம்சாட்டி இருந்த அவர் தோல்வி குறித்து கடந்த சில தினங்களாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.
இந்த நிலையில் தவறுகள் செய்ததால் தேர்தலில் தோற்றதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டரில் அவர் கூறியதாவது:-
டெல்லியில் மூன்று மாநகராட்சிக்கு கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்த வார்டுகள் எண்ணிக்கை 272. இவற்றில் 2 வார்டுகளில் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், 270 வார்டுகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பதிவாகின.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில் பா.ஜனதா வாக்கு 183 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்து உள்ளது. ஆம் ஆத்மி 48 இடங்களிலும், காங்கிரஸ் 27 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளது.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் குறித்து ஆம் ஆத்மி கூறியதாவது:-
டெல்லியின் வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சிகளுக்கும் கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி பா.ஜனதா அமோக வெற்றியை நோக்கி பயணம் செய்கிறது என தெரிகிறது. வாக்கு எண்ணிக்கையில் அதிக இடங்களில் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்து உள்ளது. இரண்டாவது இடத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே போட்டி நிலவுகிறது.
டெல்லியின் வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சிகளுக்கும் கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 54 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
மொத்த வார்டுகள் எண்ணிக்கை 272. இவற்றில் 2 வார்டுகளில் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், 270 வார்டுகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் அதிமுகவை முடக்கி பாஜக வர வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என தமிழிசை பந்தயம் கட்டியுள்ளதாக அம்மா அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்
மேலும் தமிழகம் காலம் காலமாக தனித் தீவாக இருந்து வருகிறது. இது பெரியாரின் கோவில், அண்ணாவின் நந்தவனம், எம்ஜிஆரின் தோட்டம், ஜெயலலிதாவின் கோட்டை. இங்கு வகுப்புவாத சக்திகள் தலை தூக்க முடியாது. இங்கு நடப்பது ஒரு கலாச்சார யுத்தம். இந்த யுத்தத்தில் டிடிவி தினகரன் தலைமை தாங்கிய அணியே வெற்றி பெறும் எனவும் கூறினார்.
உபி., உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, ஒடிஸா மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது.
டெல்லியில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இதற்கிடையில் டெல்லி ராஜோரிகார்டன் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏவான ஜர்னயில் சிங் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு ஏப்ரல் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தொகுதியில் ஆளும் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலையை வெட்டிக்கொண்டு வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத்தொகை வழங்குவேன் என்று பாஜக இளைஞரணி நிர்வாகி யோகேஷ் வர்ஷ்னே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பிர்பம் மாவட்டத்தில் ஹனுமன் ஜெயந்தியை நினைவுகூறும் வகையில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பேரணியாக சென்றவர்கள் அந்த வழியாக இருந்த மதராசா சாலைக்குள் செல்ல முற்பட்டதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இறைச்சிக் கூட உரிமங்களைப் புதுப்பிப்பது குறித்து உத்தரப் பிரதேச அரசு 10 நாள்களில் முடிவெடுக்க வேண்டுமென்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு அமைத்த பின்னர் சட்ட விரோதமாக செயல்பட்ட இறைச்சி கூடங்கள் மற்றும் விற்பனை கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, தொடர்ச்சியாக சீல் வைக்கப்பட்டது. விமர்சனங்கள் எழுந்தாலும் சட்டவிரோதமாக செயல்பட்டவை மீதே நடவடிக்கை என அரசு தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
ஆர்கேநகர் தொகுதியில் பல பகுதிகளில் நேற்றிரவு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றது. 2000 ரூபாய் கட்டாக வைத்து கொண்டு வீடுவீடாக பணம் கொடுத்தனர்.
அப்போது பணப்பட்டுவாடா நடந்த இடங்களில் திமுகவினர் தடுத்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் திமுக வினர் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த 3 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் திமுகவினரை சந்தித்து ஆறுதல் கூறினார். நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களை கேட்டுக் கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.