காஷ்மீரின் சோபியான் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட மேஜர் ஆதித்ய குமார் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
எல்லையில் தமிழக ராணுவ வீரர் மரணம் அடைந்த குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அவர்களின் முயற்சியை முறியடிக்க இந்திய ராணுவ வீரர்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
காஷ்மீரில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் இளையராஜா வீரமரணம் அடைந்தார்.
அவர் சிவகங்கை மாவட்டம் கண்டனியைச் சேர்ந்தவர். இவருடன் சுமேத் வாமன் என்ற ராணுவ வீரரும் மரணமடைந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சூடு முடுவுக்கு வந்துள்ளது.
சோபியான் மாவட்டம் அமைத்துள்ள அவ்நீரா கிராமத்தில் பதுங்கிக் இருந்த பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த இருதரப்பு துப்பாக்கி சண்டையில் இரண்டு வீரர்கள் மரணம் அடைந்தனர். மேலும் காயம் அடைந்த வீரர்களை அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பதுங்கிக் இருந்த பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
சோபியான் மாவட்டம் அமைத்துள்ள அவ்நீரா கிராமத்தில் பதுங்கிக் இருந்த பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த இருதரப்பு துப்பாக்கி சண்டையில் இரண்டு வீரர்கள் மரணம் அடைந்தனர். மேலும் காயம் அடைந்த வீரர்களை அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
சோபியான் மாகாணத்தில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்புரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, அவர்கள் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் கந்த்முல்லா பகுதி அருகே ராணுவ முகாம் உள்ளது. இம்முகாமில் இந்திய வீரர்கள் கண்காணிக்கின்றனர்.
இந்நிலையில், இதே மாநிலம் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஸாகூர் தாகுர் என்பவர் இம்முகாமில் பணியாற்றி வந்துள்ளார்.
இன்று அதிகாலை முதல் ஏ.கே-47 ரக துப்பாக்கியுடன் ஸாகூர் தாகுர் மாயமாகியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
மேலும் ராணுவத்தின் சார்பிலும் தாகுர் மாயமானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குப்வாரா அருகே பன்ஞ்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவில் தாக்குதல் நடத்தும் நோக்கில் தீவிரவாதிகள் காஷ்மீர் பகுதிக்குள் நுழைகின்றனர். இதனால், எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய ராணுவம் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் குப்வாரா பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டு பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தற்கொலைப்படை தாக்குதல் மூலம் ராணுவ நிலைகளுக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சித்ததாக கூறப்படுகிறது.
காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவுகளில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்
காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில் நேற்று மாலை அடுத்தடுத்து இரண்டு பனிச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலரது நிலை என்னவானது என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அசாமின் டிக்போய் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், உபா பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். மேலும் இவ்விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ வீரரை கொடூரமாக கொன்றுள்ளனர். இதற்க்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.
நேற்று இரவு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பின்னர் வீரர் ஒருவரை சிறைபிடித்த தீவிரவாதிகள் அவரை கொடூரமாக கொன்று உடலை துண்டுதுண்டாக வெட்டி வீசி சென்றுள்ளனர். தீவிரவாதிகளின் துப்பாக்கி தாக்குதலில் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவர் நடத்திய திடீர் தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுமார் 7 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் படையினர் வியாழக்கிழமை இரவு நடத்திய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் காயமைடந்தார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரிக்கு உள்பட்ட போபியா பகுதியில் இந்திய நிலைகளை மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
காஷ்மீரில் பார்கான் வானி ஏரியாவில் செல்போன் டவரில் ஏற்றப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடியை அகற்றிய ராணுவ வீரர் இந்திய தேசிய கொடியை பறக்கச் செய்தார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. வன்முறையில் இதுவரைக்கும் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
துருக்கியில் ராணுவ தளத்திற்குள் நுழைய முயன்ற 35 தீவிரவாதிகள் அந்நாட்டு ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் குர்தீஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற தீவிரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள். துருக்கியின் ஹக்காரியில் நேற்று நடந்த மோதலில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 25 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது.இங்கிருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு விமானப்படை சரக்கு விமானம் மூலம் வாரந்தோறும் பொருட்கள் கொண்டு செல்லப்படும். ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அதேபோல், விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.-32 ரக சரக்கு விமானம் ஒன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு புறப்பட்டு சென்றது. அதில் 2 விமானிகள் உள்பட 6 சிப்பந்திகளும், 23 ராணுவ வீரர்களும் பயணம் செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.