சென்னையில் உள்ள நடிகர் விஷால் தயாரிப்பு அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. வரித்துறையினர் சோதனை நேற்று நடைபெற்றது.
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சென்னை வடபழனியில் உள்ளது. மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடைபெற்றது. விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி முறையாக ஜிஎஸ்டி செலுத்தி உள்ளதா? என்று என்பதை அறியவே சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் கூறியதாக தகவல் கிடைத்தது.
இன்று சென்னையில் உள்ள நடிகர் விஷால் தயாரிப்பு அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சென்னை வடபழனியில் உள்ளது. இன்று மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடைபெற்றது. விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி முறையாக ஜிஎஸ்டி செலுத்தி உள்ளதா? என்று என்பதை அறியவே சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் கூறியதாக தகவல் கிடைத்தது.
"நாம் 28% ஜி.எஸ்.டி செலுத்துகிறோம், இந்நிலையில் உள்ளூர் பொழுதுபோக்கு வரி விதிக்கப்படக் கூடாது. முந்தைய வரி விதிப்பை விட இது அதிகமாகவே உள்ளது. இது நாட்டின் ஒருன்பான்மைக்கு புரம்பானது"- தீபக் ஆஷர், இந்திய மல்டிலெக்ஸ் அசோஸியேஷன் தலைவர்.
தமிழக சினிமா ரசிகர்கள் தற்போது, ஜி.எஸ்.டி மற்றும் உள்ளூர் வரிகளின் என இரட்டை வரிகளால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களை கானும் ஆசை ரசிகர்களின் மத்தியில் பகல் கனவாகவே மாறி வருகிறது எனலாம்!
திரையரங்குகளில் புதிய விதிகளைப் பின்பற்றும்படி அறிக்கை ஒன்றை நேற்று நடிகர் விஷால் வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று, ’திரையரங்க உரிமையாளர் சங்கம்’ பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர்.
தமிழகத்தில், திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்கான விலை 28% ஜிஎஸ்டி வரி மற்றும் 30% கேளிக்கை வரி என இரண்டு வரிகள் இணைக்கப்பட்டு விலை அதிகரிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு, கடந்த 27-ஆம் தேதி முதல் புதிய கேளிக்கை வரியில் திருத்தம்செய்து அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி கேளிக்கை வரி 30% இருந்து 10% குறைக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று தமிழக முதல்வரை சந்தித்தப்பின் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவர் தெரிவித்துள்ளதாவது, கேளிக்கை வரியினை முழுமையாக அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டது, ஆனால் 10% இருந்து 8% வரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில், திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்கான விலை 28% ஜிஎஸ்டி வரி மற்றும் 30% கேளிக்கை வரி என இரண்டு வரிகள் இணைக்கப்பட்டு விலை அதிகரிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு, கடந்த 27-ஆம் தேதி முதல் புதிய கேளிக்கை வரியில் திருத்தம்செய்து அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி கேளிக்கை வரி 30% இருந்து 10% குறைக்கப்பட்டது.
எனினும், தற்போது போடப்பட்டிருக்கும் புதிய வரி விதிப்பிலும் தியேட்டர்களில் டிக்கெட் விலை அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
நேற்று விழித்திரு பிரஸ்மீட்டில் தன்ஷிகாவை டி.ராஜேந்தர் கடுமையாக சாடினார். இதனால் நடிகை தன்ஷிகா அழத்தொடங்கினார். ஆனாலும் டி.ராஜேந்தர் தொடர்ந்து தன்ஷிகாவை சாடினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
விஷால் நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’ படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
மிஷ்கின் இயக்கித்தில், விஷால் நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’. நடிகர் விஷாலே இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் ரகுல் ப்ரீத்சிங், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா பாக்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு ரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை வருகிற செப்டம்பர் 14-ம் தேதி ரிலீஸ் செய்யத் படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் ‘கதாநாயகன்’ படத்தின் ஒன்-நெனப்பு பாடல் டீசர் இன்று வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் விஷ்ணு விஷால், கேத்ரீனா தெரசா, சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை முருகானந்தம் இயக்கி வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகனான விஷ்ணு விஷால் தயாரித்து இருக்கிறார்.
இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸாகிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் டிரய்லர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
மிஷ்கின் இயக்கித்தில், விஷால் நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’. நடிகர் விஷாலே இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் ரகுல் ப்ரீத்சிங், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா பாக்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸ் செய்யத் படக்குழு திட்டமிட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
டீசர்:
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில், சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் விஷால் செய்தியார்களிடம் கூறியதாவது:
டிடிஹெச்சில் திரைப்படத்தை வெளியிடுவது பற்றி எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைகள் மீது நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.
தொலைக்காட்சி மற்றும் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை மேற்கொள்கிறது.
இதைக்குறித்து தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கில்டும் இணைந்து கூறியிருப்பதாவது:-
சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கோ, தனியார் கேபிள் உரிமையாளர்களுக்கோ எந்த உரிமையும், உரிமமும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், கில்டும் கொடுக்கவில்லை என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவிக்கிறோம்.
மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் திரைப்படங்கள் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியாவதை தடுக்க முடியும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடுவிடம் நடிகர் விஷால் கோரிக்கை மனு அளித்தார். அவருடன் நடிகர் கமல் இருந்தார்.
சென்னை வந்துள்ள மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடுவை நடிகர்கள் கமல்ஹாசன், விஷால் உள்ளிட்டவர்கள் நேரில் சந்தித்து பேசினர். வெங்கையாடு நாயுடுவிடம் சட்ட விரோதமாக படங்கள் இணையத்தில் வெளியாவதை தடுக்கக் கோரிக்கை மனுவும் அளித்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால்:-
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளாக விஷாலின் ‘நம்ம அணி’ பெரும்பான்மையுடன் தேர்வாகியுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் விஷால் 478 வாக்குகள், ராதாகிருஷ்ணன் 335 வாக்குகள், கே.ஆர் 224 வாக்குகள் பெற்று இருந்தார்.
இந்நிலையில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் ஏப்ரல் 6-ம் தேதி வியாழக்கிழமை மாலை ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பதவியேற்பு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் தொடர்ந்து 11 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து நடிகர்கள் விஷால், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. அந்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
நீயா நானானு பார்த்துக்கலாம் என தமிழ் ராக்கர்ஸ்க்கு விஷால் சவால் விடுத்துள்ளார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை போல் நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘சிம்பா’ படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர்.
இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், காந்திகிருஷ்ணா, வெங்கட் பிரபு நடிகர்கள் விஷால், ஜெயம் ரவி, பிரசன்னா, பிரித்வி பாண்டியராஜன், அரவிந்த், அஜய், நடிகைகள் சினேகா, தன்ஷிகா கலந்து கொண்டனர்.
விஷாலின் வேட்பு மனுவுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றம் செல்ல இருப்பதால் அவரது மனுவை நிறுத்தி வைத்துள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுகிறார்.
தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக எஸ்.தாணு, செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன் மற்றும் துணைத் தலைவர்களாக கதிரேசன், தேனப்பன், பொருளாளராக டி.ஜி. தியாகராஜன் ஆகியோர் உள்ளனர்.
இவர்களின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக அடுத்த மாதம் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடக்கிறது. அடுத்த நாள் 13-ம் தேதி மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். 18-ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.