நியூயார்க்கில் இடா சூறாவளியில் அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சாலைகள் குளங்களாக மாறிவிட்டன. சுரங்கப்பாதையில் காட்சிகள் நீர்வீழ்ச்சிகள் பாய்கிறது போல் உள்ளது. பல பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. புயலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக நியூயார்க்கில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, மெட்ரோ பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. கார்கள் சாலைகளில் மிதக்கின்றன. இதுவரை குறைந்தது 41 பேர் இறந்துள்ளனர் என செய்தி நிறுவனமான AFP செய்தி அறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை "இடா" புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடுமையாக தாக்கியதைத் தொடர்ந்து கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயல் கரையை கடந்தபோது வீசிய சூறைக்காற்றால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அதன் முக்கிய நட்பு நாடுகளை அணுகி அந்த நாடுகளுக்கு தங்கள் ஆதரவு இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று நிக்கி ஹேலி கூறினார்.
தாலிபான்கள் விதித்த காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்பு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறின. இப்போது ஆப்கான் நாடு முழுவதும் தலிபான்களின் கடுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. திங்களன்று, கடைசி அமெரிக்க விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்த தாலிபான் போராளிகள், காற்றில் சுட்டு சுதந்திரத்தை கொண்டாடினர். கடைசி விமானத்துடன், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் 20 வருட இராணுவ இருப்பு முடிவுக்கு வருகிறது.
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், புளோரிடா மாகாணம்தான் மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது.புளோரிடா மாகாணத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலைமை மோசமாகியுள்ள்ளது
ஆப்கானிஸ்தானில் வரும் நாட்களில் இன்னும் பல தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்த சில மணி நேரங்களிலேயே, அங்கு ஒரு வான்வழித் தாக்குதல் நடந்தது.
காபுலில் மற்றொரு தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறிய நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பலத்த வெடி சத்தம் கேட்டுள்ளது.
அமெரிக்க ட்ரோன் தாக்குதலில், ISIS கோரசன் நெட்வொர்க் அமைப்பை சேர்ந்த இரண்டு உயர்மட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். என பெண்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காபூல் விமான நிலையத்தில் நேற்று நடந்த கொடிய தற்கொலைத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் அமைப்பை குறிவைத்து, அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் வாஷிங்டனில் ஒரு அரண்மனை வைத்திருக்கிறார். இந்த அரண்மனையின் சொத்து மதிப்பு 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தானில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உலகளவில் 213 ஆவது இடத்தில் உள்ளது. வேலைவாய்ப்பில்லா விகிதமும் 50 விழுக்காடும், வறுமை விகிதம் 70 விழுக்காடும் தாண்டியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.