தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 11-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்வதை ஸ்டைலாக நினைப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள அடுத்த கட்ட ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஊரடங்கில் பல வித தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை, புதிய கல்வியாண்டுத் துவக்கம் என பலவித பணிகள் துரித கதியில் நடக்கத் துவங்கியுள்ளன. ஆகையால் அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக தினமும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
நூறு சதவிகிதம் கட்டாய கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தொற்று கட்டுக்குள் இருக்கும் 27 மாவட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன், பிற ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்து பணிகளை மெற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் அதிக அளவிலான தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21 வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற கட்சித் தலைவர்களுடன் சந்திப்பை நடத்தியவுடன், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இது குறித்து ஆலோசனை செய்வார். அதற்குப் பிறகு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் இறுதி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும், இன்று அல்லது நாளைக்குள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த ஒரு முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், பிற வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி முறை உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் பொதுத்தேர்வுகளை எதிர்கொண்டிருக்கும் மாணவர்களை தேர்வுகளுக்கு தயார் படுத்தும் வகையில், வாட்ஸ் ஆப் மூலம் அலகுத் தெர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்வுகளுக்கு முன்னர் மாணவர்களுக்கு உதவும் வகையில், அலகுத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.