தேனி தொகுதியில் தனித்துப் போட்டியிட உள்ளதாகவும், யாருடைய உருட்டல் மிரட்டலுக்கும் அஞ்சப் போவதில்லை என்றும் அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
Rajiv Gandhi assassination case : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
Rajiv Gandhi assassination case: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை போன்று தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயங்களை வழங்கினார்.
இதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அண்ணாவின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
இது தொடர்பாக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டது:- சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார். முதல் பிரதியை, கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சருமான வெ. சரோஜா பெற்றுக் கொண்டார்.
தமிழக கடல்பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடை 29-ம் தேதியுடன் அதாவது நேற்றுடன் முடிவடைந்தது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல தயாராகி வருகின்றனர்.
இந்திலையில் சற்று முன் கிடைத்த தகவலின் படி அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைக்கிறது என்று தகவல் கிடைத்துள்ளது. இப்படி நடந்தால் ஜெயலலிதா சாதனை படைப்பார்.
அதாவது தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்த பெருமை எம்.ஜி.ஆர் மட்டும் சாரும். அவர் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியைத் தக்க வைத்துள்ளார். அந்த சாதனையை இதுவரை யாரும் முறியடித்ததில்லை.
நடிகர் செந்தில் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சிலர் செந்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பினார்கள்.
இதை அறிந்த செந்தில் வதந்திக்கு முற்று புள்ளி வைத்தார். மேலும் அவர் கூறியது. வாட்ஸ்-அப்பில் வரும் செய்தியை யாரும் நம்பவேண்டாம். அது வெறும் வதந்தி. எனக்கு வேண்டாத சிலர் இவ்வாறு பண்ணியிருக்கிறார்கள். ஆண்டவன் புண்ணியத்திலும் மற்றும் "அம்மா" புண்ணியத்திலும் நான் நன்றாக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மே தினத்தன்று செல்வி ஜெயலலிதா தேர்தல் பேரணியில் உரையாற்றியது.ஞாயிறன்று தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா தனது அரசாங்க ஊழியர்களுக்கு பல நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு அனைத்து வகையான நன்மைகள் கிடைக்க எனது அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் Rs.568 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்திருக்கிறது.
ஆளும் அதிமுக பொது செயலாளர் இந்த ஜெயலலிதாவும் தனது அரசாங்கம் 2011ல் கூறப்பட்ட அனைத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது மட்டுமில்லாமல் கடந்த தேர்தலில் அறிக்கையில் இல்லாத திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன என்றார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே 16ம் தேதி நடைபெறயுள்ளது. அ.தி.மு.க.வை தவிர அனைத்து கட்சிகளும் தமது தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இந்தநிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பிரச்சாரக் கூட்டதின் போது முதல்வர் செல்வி ஜெயலலிதா வெளியிட்டார். அதில் தொலைநோக்கு வளர்ச்சி திட்டங்களும் இடம் பெற்று இருந்தன. பெண்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவசதிட்டங்களும் இருந்தன.
தேர்தல் அறிக்கையின் விவரங்கள்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.