முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயங்களை வழங்கினார்.
இதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், 2016-2017ஆம் நிதியாண்டிற்கான திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 12,500 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் அடையாளமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயங்களை வழங்கினார்.
சமூக நலத் துறையின் மூலம், ஏழை பெற்றோர் களின் பெண்கள், விதவைத் தாய்மார்களின் மகள், ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், மறுமணம் செய்து கொள் ளும் விதவைகள் ஆகியோருக்கு உதவிடும் வகையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா 2011-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக 50,000 ரூபாயும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 25,000 ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுக்கப் பட்ட வாக்குறுதியின்படி அனைத்து திருமண உதவி திட்டங்களின் கீழ் வழங்கப் படும் நிதியுதவியுடன் திருமாங்கல் யத்திற்கென வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கிட முதல்- அமைச்சர் ஜெயலலிதா 23.5.2016 அன்று ஆணை யிட்டார்.
அதன்படி, ஏழைக் குடும் பத்தைச் சேர்ந்த பெற்றோர் களின் மனம் குளிரும் வண்ணம் திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு இதுவரை பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள 12,500 பயனாளிகளுக்கு திருமண உதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயங்களை வழங்கினார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடமிருந்து திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்க நாணயங்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை முதல்-அமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டார்கள்.
திருமாங்கல்யம் செய்ய தங்க நாணயங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 2016-2017ஆம் நிதியாண்டிற்கு 204 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு, 23.5.2016க்கு பின் விண்ணப்பம் செய்த 12,500 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயங்களும், அதற்கு முன்பு விண்ணப்பித்த 1,40,000 பயனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயங்களும் வழங்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் டாக்டர் சரோஜா, தலைமைச் செயலாளர் இராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Puratchi Thalaivi Amma launches distribution of free 8 gms of gold to 12,500 women under marriage assistance scheme. pic.twitter.com/1WEaMX2h66
— AIADMK (@AIADMKOfficial) September 22, 2016