மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது- மீனவர்கள் மகிழ்சி

Last Updated : May 30, 2016, 07:26 PM IST
மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தது- மீனவர்கள் மகிழ்சி title=

தமிழக கடல்பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடை 29-ம் தேதியுடன் அதாவது நேற்றுடன் முடிவடைந்தது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்ல தயாராகி வருகின்றனர்.

தமிழக கடல்பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் மே மாதம் 29-ம் தேதி வரை கடலுக்குச் சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அதாவது மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும், கடல்வளத்தை பாதுகாக்கவும் ஆண்டுதோறும் இத்தடை மேற்கொள்ளபடுகிறது. மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். தங்களது படகுகளை சரிசெய்து ரெடியாக வைத்திருக்கின்றன.

மீன்பிடித் தடைக்காலத்தில் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இந்த நிதி பேருதவியாக இருந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக மீனவ சமுதாயத்தினர் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிவித்துள்ளனர்.

Trending News