புதன்கிழமையன்று தில்லியில் ஒரே நாளில் 17,282 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 104 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்தியாவில் புதன்கிழமை COVID-19 நோய்த்தொற்று காரணமாக 1,033 பேர் இறந்தனர்.
மகாராஷ்டிராவில் மிக அதிகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஏப்ரல் 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
ஏற்கனவே போடப்பட்ட கொரோனா பொது முடக்கத்தால் வேலையிழந்த மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட நிதி இழப்புகளில் இருந்து இன்னும் அவர்கள் மீட்கப்படவில்லை. இன்றும் பலர் வேலையில்லாமல் உள்ளனர். அரசாங்கம் மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்தால் வேலையின்மை மீண்டும் அதிக அளவில் அதிகரிக்கும்" என்கிறார் சுனிட்டி.
கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, ஏற்கனவே இருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை ஏப்ரல் 30 வரை நீடிக்கும் என இன்று (புதன்கிழமை) தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோவிட் -19 பரவுவதைத் தடுக்க கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட பொது முடக்க உத்தரவு உலகம் முழுவதிற்கும் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது என்று பிரதமர் மோடி கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 62,291 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,908,373 ஆக உயர்ந்துள்ளது.
அடுத்த சில நாட்களில், மாநிலத்தில் தினசரி தொற்றுகள் 25000-30000 க்கு இடையில் இருந்தால், நாங்கள் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று முதல்வர் தெரிவித்ததாக என்று சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.