தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு, அதற்கு பதில் பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகளை கொண்டு வர இபிஎஸ் முயன்று வருவதாக அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டுமென அதிமுகவுக்குள் குரல் எழுந்திருக்கும் சூழலில் எடப்பாடி பழனிசாமியோ சசிகலாவை மீண்டும் சேர்ப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
இபிஎஸ் மீது பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணியை பலப்படுத்துவேன் என சசிகலா வாக்குறுதி கொடுத்தால் அதிமுகவுக்குள் அவர் அடி எடுத்து வைக்க டெல்லி பச்சைக்கொடி காட்டும் என்று கணிக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.