கொங்கு மண்டலம் கொடுத்த வரவேற்பு - சசிகலாவின் விளக்கம்

கொங்கு மண்டல சுற்றுப்பயணம் குறித்து சசிகலா விளக்கமளித்துள்ளார்

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 13, 2022, 02:08 PM IST
  • கொங்கு மண்டலத்தில் சசிகலா
  • சுற்றுப்பயணத்தை முடித்த சசிகலா
  • சசிகலா சென்னை திரும்பினார்
கொங்கு மண்டலம் கொடுத்த வரவேற்பு - சசிகலாவின் விளக்கம் title=

சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவுக்குள் குரல்கள் தற்போது எழ ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் சசிகலாவை கட்சிக்குள் விடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமியும், கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகளும் நினைப்பதாக கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் அவர் சேலம் மாவட்டத்தில் சில நாள்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சசிகலாவை கட்சிக்குள் விடக்கூடாது என்பதில் கொங்கு மண்டல நிர்வாகிகளும், எடப்பாடி பழனிசாமியும் தீவிரமாக இருக்கிறார்கள் என தகவல் வெளியாகும் சூழலில் அவரது இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Sasikala

எடப்பாடியில் பேசிய சசிகலா, அதிமுகவின் ஆட்சியை அமைத்து தமிழக மக்களை காப்பாற்றுவேன் என சூளுரைத்தார். பழனிசாமியின் சொந்த ஊரில் சசிகலாவின் இந்த சூளுரை அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | அதிமுகவை யார் வழிநடத்த வேண்டும்... சசிகலா சொல்வது என்ன?

இந்நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய சசிகலா செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசியல் ரீதியாக எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. தீர்ப்பு குறித்து அதிமுக தரப்பில் கொண்டாட்டங்கள் இருந்தாக பேசப்படுகிறது. ஆனால், நான் அங்கு பார்த்ததே வேறு. கொங்கு மண்டலத்தில் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.

Sasikala

எங்களை பொறுத்தவரைக்கும் 1996இல் இருந்தே இது போன்ற வழக்குகளை சந்தித்து வருகிறோம். இதனால் இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. அதிமுகவை பாஜக கைப்பற்ற நினைப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது” என்றார்.

மேலும் படிக்க | தீர்ப்புக்கு பிறகு எடப்பாடியில் சசிகலா எடுத்த சபதம்... ஆதரவாளர்கள் ஆரவாரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News