பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும்போது ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வெண்டும் என்பதற்கான கூடுதல் விதிமுறைகளை தமிழக அரசு விரையில் வெளியிடும் என இன்று காலை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் தொடர்பாக 3 நாட்களுக்குள் விசாரணையின் முழு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி திரிபாதிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை தரவும் ஆணையம் உத்தரவு.
ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடக்கும் ஆலோசனைக்குப் பிறகு இது குறித்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
பாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த பத்மா சேஷாத்ரி கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழும்பிய குற்றச்சாட்டில் அஷோக் நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
பாலியல் துன்புறுத்தலில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தனது சக போலீஸ் அதிகாரியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தமிழ்நாடு சிறப்பு டிஜிபி மீது குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது
Sexual Harassment of Female Doctors: நோயாளிகளால் பாலியல் துன்புறுத்தல் (Sexual Harassment) மிகவும் மோசமான முறையில் செய்யப்படுவதாக ஒரு பெண் மருத்துவர் (Female Doctors) கூறினார். இது முதல் முறையாக நடக்கும்போது மிகவும் மோசமாக உணர்கிறது. இதுபோன்ற பெரும்பாலான அழைப்புகள் இரவில் வருகின்றன. ஆண் மருத்துவர்களை இரவில் வைத்திருக்குமாறு டெலிமெடிசின் நிறுவனத்திடம் கேட்டுள்ளோம்.
அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன். அதனை தடுக்கும் முயற்சியாக தான் என் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை 8 வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.