திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்க மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடக்க விழாவில் மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு பேசியதாவது:- அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.
கட்சிக்கு அப்பாற்பட்டு நான் மிகவும் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவை இந்த தருணத்தில் நினைவுகூர்கிறேன். சுரங்க ரெயில் பாதையில் அனைத்து பாதுக்காப்பு வசதிகளும் உள்ளன. ஜெயலலிதாவின் கோரிக்கையின் பேரில் மெட்ரோ திட்டம் விரிவு படுத்தப்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் ‘தூய்மை இந்தியா’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வருடம் தூய்மை குறித்து ஆய்வு 434 நகரங்களில், 37 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டது. அதன் முடிவை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
இந்த பட்டியலில், முதலிடத்தில் மத்திய பிரதேச மாநிலம் இந்துார் உள்ளது. அதனை தொடர்ந்து போபால்(மத்திய பிரதேசம்), விசாகப்பட்டினம்(ஆந்திர பிரதேசம்), சூரத்(குஜராத்), மைசூரு(கர்நாடகம்), திருச்சி(தமிழ்நாடு), டெல்லி, நவிமும்பை(மகாராட்டிரா), திருப்பதி(ஆந்திர பிரதேசம்), வதோதரா(குஜராத்) ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
2016-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதிற்கு இயக்குநர் மற்றும் நடிகரான கே. விஸ்வநாத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய சினிமவின் தந்தை என்றழைக்கப்படும் மறைந்த இயக்குநர் தாதாசாகேப் பால்கே பெயரால் ஆண்டு தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
2016 ஆண்டுக்கான 'தாதாசாகேப் பால்கே' விருது மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான கே.விஸ்வநாத்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
3 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர்கள் நிதின்கத்காரி, வெங்கய்யா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.
அப்பொழுது தமிழக முதல்வரிடம் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி முதலில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்தார். அப்போது தமிழக நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தார்.
அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு முதல் அமைச்சரின் உடல்நலம் பற்றியும் மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்து திரும்பி சென்றுள்ளார்.
மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் முதலமைச்சர் இருப்பதாகவும் அப்பலோ மருத்துவ அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மூன்று முறை தலாக் கூறுவதையும், ஒரே சிவில் சட்டத்தையும் முஸ்லீம் வாரியம் ஒன்றாக பார்க்க வேண்டாம் என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: மூன்று முறை தலாக் கூறும் முறையையும், பொது சிவில் சட்டத்தையும் ஒன்றாக இணைத்து பார்க்கக்கூடாது. இதில் அரசியல் செய்யக்கூடாது. மூன்று முறை தலாக் கூறப்படுவது பொது சிவில் சட்டத்துடன் இணைக்கப்படுகிறது. ஆனால் இதில் முக்கியமானது, பாலின நீதி, பெண்களின் மாண்பு, பாகுபாடு பார்க்க்கூடாதது ஆகியவை ஆகும்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 22-ம் தேதி சேர்க்கப்பட்டு, முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை, 11:00 மணிக்கு, தலைமைச் செயலக வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், 197 புதிய அரசு பஸ்களை, கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, 11:30 மணிக்கு, சென்னை விமான நிலையம் - சின்னமலை இடையிலான, மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் துவக்கி வைத்தார்.
சென்னையில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் மேம்பாலம் பணிகள் முடிந்தன. அங்கு கடந்த ஆண்டு முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பாதை பணி கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. அந்த பாதையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து சின்ன மலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில்களை இயக்கலாம் என்று கடந்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் வழங்கினார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலா மாண்டு நினைவு நாளில் அவரது வெண்கல சிலை திறக்கப்பட்டது. மேலும் அறிவுசார் மையம், மணிமண்டபம் ஆகியவை அமைப்பதற் கான அடிக்கல் நாட்டப் பட்டது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலா மாண்டு நினைவு நாளில் அவரது வெண்கல சிலை திறக்கப்பட்டது. மேலும் அறிவுசார் மையம், மணிமண்டபம் ஆகியவை அமைப்பதற் கான அடிக்கல் நாட்டப் பட்டது.
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா.
’பீஸ்’ டிவி அமைதியை பாதிக்கிறது என்றும் இந்தியாவில் சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்றும் மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கூறிஉள்ளார். டாக்காவில் 22 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பு செய்துவரும் ’பீஸ்’ டிவியை வங்காளதேசம் தடை செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.