சர்வதேச கிரிக்கெட்டில், தற்போது உள்ள வீரரகளில் விராட் கோலி மிகச் சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு கேப்டனாக அவர் மீண்டும் தோல்வியடைந்துள்ளார்.
WTC இறுதிப் போட்டியில் அணியைத் தேர்ந்தெடுப்பதில் நிர்வாகம் சில தவறுகளைச் செய்துள்ளதாக கருதப்படுகின்றது. இப்போது அடுத்ததாக நடக்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலாவது இவை திருத்தப்பட வேண்டும்.
எம்.எஸ்.தோனியா விராட் கோலியா? யார் சிறந்த கேப்டன்? என்ற விவாதத்தை ரசிகர்கள் சமூக ஊடகனகளில் துவக்கி விட்டனர். ஐ.சி.சி போட்டிகளில் நான்கு போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திச் சென்ற எம்.எஸ். தோனி, அவற்றில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றார்.
வழக்கமாக ஐந்து நாட்கள் ம்ட்டுமே டெஸ்ட் போட்டி நடைபெறும். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஏன் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது? மாற்று நாள் என்றால் என்ன?
முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் விளையாடி வருகின்றனர். எனினும், இந்த போட்டியில் அணிகள் விளையாடுவதை விட மழைதான் அதிகமாக விளையாடி வருகிறது. இதற்கிடையில் இன்று ஒரு சுவாரசியமான விஷயம் நடந்தது.
WTC Final, Ind vs NZ: 64.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 146 ரன்களை எடுத்துள்ள நிலையில் மழை வந்ததால் ஆட்டம் தடைபட்டது. விராட் கோலி 44 ரன்களுடனும், அஜிங்க்ய ரஹானே 29 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
இங்கிலாந்தில் இந்தியா நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி துவங்கியது. சற்று முன்பு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நாள் வந்துவிட்டது. கிரிக்கெட்டின் பல வடிவங்களில் மிகவும் நேர்த்தியான வடிவமாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ஏகாஸ் பவுலில் இன்று துவங்கவுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
உலக கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) இறுதிப் போட்டி, சவுத்தாம்ப்டனின் ஏகாஸ் பவுல் மைதானத்தை இறுதி செய்துள்ளது. ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை நடைபெறும் இறுதிப் போட்டி இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் நடைபெறும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.