CAATSA sanctions: S400 ஏவுகணை கொள்முதல் தொடர்பான தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு

CAATSA sanctions Exemption to India: ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக CAATSA தடையில் இருந்து அமெரிக்க இந்தியாவுக்கு விலக்கு அளித்ததன் பின்னணி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 15, 2022, 05:19 PM IST
  • ரஷ்யாவிடம் இருந்து 2018ம் ஆண்டு S-400 ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டது இந்தியா
  • ரஷ்யாவுடனான வர்த்தகத்திற்கு காஸ்டா தடை விதித்த அமெரிக்கா
  • சிறப்பு சலுகையின் மூலம் இந்தியாவுக்கு அமெரிக்காவின் தடை விலக்கு
CAATSA sanctions: S400 ஏவுகணை கொள்முதல் தொடர்பான தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு title=

காஸ்டாவின் கீழ் ரஷ்யாவின் ஏவுகணை ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவிற்கு விலக்கு அளிக்க அமெரிக்க அரசு சட்டத் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது.  2018ம் ஆண்டு, அக்டோபர் மாதம் S-400 வான் ஏவுகணை அமைப்புகளின் ஐந்து படைப்பிரிவுகளுக்கான 5.43 பில்லியன் டாலர் ஒப்பந்தமானது, இந்தியவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கையெழுத்தானது. இது அமெரிக்காவின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக இருந்தது. ஆனால், தற்போது குழு குரல் வாக்கெடுப்பு மூலம், அமெரிக்க அரசின் கமிட்டி ஒரு சட்ட திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது இது தண்டனைக்குரிய CAATSA தடைகளில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கலிஃபோர்னியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி அமெரிக்கரான ரோ கன்னா, இந்த சட்டத் திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். சீனா போன்ற ஆக்கிரமிப்பாளர்களைத் தடுக்க உதவும் வகையில், அமெரிக்காவின் எதிரிகளை எதிர்க்கும் தடைச் சட்டம் (Countering America's Adversaries Through Sanctions Act (CAATSA)), இந்தியாவுக்கு விலக்கு வழங்க ஜோ பிடன் நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.

தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தின் (NDAA) பரிசீலனையின் போது, ​​'என் பிளாக்' (en bloc) திருத்தத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமையன்று (2022, ஜூலை 14) இந்தத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது என்று பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க | பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பவரா? பகீர் எச்சரிக்கை

சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கவேண்டும். இந்திய காக்கஸின் துணைத் தலைவராக, நமது நாடுகளுக்கிடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்தவும், இந்திய சீன எல்லையில் இந்தியா தன்னைத் தற்காத்துக் கொள்வதை உறுதி செய்யவும் உழைத்து வருவதாக இந்திய வம்சாவளி அமெரிக்கரான ரோ கன்னா தெரிவித்தார்.  

இதைப் பற்றி பேசிய இந்திய வம்சாவளி அமெரிக்கரான ரோ கன்னா, "இந்த திருத்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, மேலும் இது இரு கட்சிகளின் அடிப்படையில் சபையில் நிறைவேற்றுவதைப் பார்க்க பெருமையாக இருக்கிறது" என்று கூறினார்.

ரஷ்ய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறைகளுடன் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நாடுகளை பொருளாதாரத் தடைகளுடன் தண்டிக்க CAATSA, 201ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க | பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டது

2014 இல் கிரிமியாவை ரஷ்யா இணைத்ததற்கும், 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதற்கும் பதிலளிக்கும் வகையில், ரஷ்யாவிடமிருந்து முக்கிய பாதுகாப்பு சாதனங்களை வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும் என்று அமெரிக்க சட்டம் கூறுகிறது.  

2018 அக்டோபர் மாதத்தில், S-400 வான் ஏவுகணை அமைப்புகளை வாங்குவது தொடர்பான 5.43 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா ரஷ்யாவுடன் கையெழுத்திட்டது. பொருளாதாரத் தடைகளில் இருந்து இந்தியா விலக்கு பெறுவதற்கு இருதரப்பு ஆதரவும் இருந்தது. இதை அடிக்கடி அமெரிக்க அதிபரும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கு CAATSAவின் கீழ் துருக்கிக்கு அமெரிக்கா ஏற்கனவே விலக்கு அளித்துள்ளதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

மேலும் படிக்க | தொப்பையை குறைக்க இந்த உணவுகளை காலையில் சாப்பிட்டால் போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News