ஆஸ்திரேலியா தனது தேசிய கீதத்தை திருத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் தேசிய கீதத்தில், அந்த நாடு “young and free” அதாவது "இளமையான மற்றும் சுதந்திரமான” நாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த குறிப்பை அகற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக பலர் கோரி வந்தனர்.
ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்கள் உலகின் பழமையான தொடர்ச்சியான நாகரிகத்தின் சான்றாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதால், இந்த குறிப்பு ஒத்துப்போகவில்லை என்ற கருத்து பரவலாக நிலவி வந்தது.
தேசிய கீதத்தின் (National Anthem) வரிகள் ‘for we are one and free” அதாவது “நாங்கள் ஒன்றுமையாக சுதந்திரத்துடன் உள்ளோம்” என்று குறிப்பிடும் வகையில் செய்யப்பட்ட மாற்றம் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
கான்பெராவில் (Canberra) செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், "நம் பண்டைய கலாச்சாரம் மற்றும் மக்களின், காலத்தை வென்ற நிலத்தில் வாழ்கிறோம். மேலும் 300 க்கும் மேற்பட்ட தேசிய மூதாதையர் பிரிவுகள் மற்றும் மொழி குழுக்களின் கதைகளை ஒன்றிணைக்கும் மையமாக இந்த நாடு உள்ளது” என்று கூறினார்.
"நமது தேசிய கீதம் அதை எடுத்துக்காட்டும் வகையில் இருக்க வேண்டும். நாங்கள் இன்று செய்துள்ள மாற்றங்கள் மூலமாகவும் செய்துள்ள அறிவிப்புகள் மூலமாகவும் அந்த இலக்கை அடையலாம் என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் (British) காலனித்துவ ஆட்சியாளர்கள் வருவதற்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த கண்டத்திற்கு வந்த பழங்குடியினருடன் சமரசம் செய்ய ஆஸ்திரேலியா பல தசாப்தங்களாக போராடியது.
ALSO READ: Watch: பாகிஸ்தானில் தீ வைத்து தகர்த்தப்பட்ட இந்து கோயில், கொதித்தெழிந்த Netizens!!
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியர்களுக்கு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி தேசிய விடுமுறை அளிக்கப்படுகிறது. 1788 ஆம் ஆண்டு, இந்த நாளில்தான் ஆங்கிலேயர்களின் முதல் குழு சிட்னி துறைமுகத்திற்கு வந்தது. இதில் முக்கியமாக இங்கிலாந்திலிருந்து சிறை கைதிகள் இங்கு அழைத்து வரப்பட்டார்கள். அந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில பழங்குடியின மக்கள் ஆஸ்திரேலியா தினத்தை “படையெடுப்பு நாள்” என்று குறிப்பிடுகின்றனர்.
தற்போது பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு மத்தியில் சுதேச அதிகாரமளிப்பதில் ஒரு புதிய கவனமும் உத்வேகமும் வந்துள்ளது.
தேசிய கீதத்தின் சொற்களை மாற்றுவதற்கான யோசனையை 2020 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் முன்வைத்தார். தற்போதைய சொற்கள் ஆஸ்திரேலியாவின் (Australia) "பெருமைமிக்க கலாச்சாரத்தை" புறக்கணித்ததாக அவர் கூறினார்.
இந்த திட்டத்தை உள்நாட்டு ஆஸ்திரேலியர்களுக்கான மத்திய அமைச்சர் கென் வியாட் மற்றும் ஃபயர்பிரான்ட் வலதுசாரி ஒன் நேஷன் கட்சித் தலைவர் பவுலின் ஹான்சன் உட்பட பல சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.
புதிய தேசிய கீதத்தை பாடும் முதல் நபராக அவர் விரும்புகிறாரா என்று கேட்டபோது, மோரிசன், “பிரதமர்கள் பாடுவது பிரதமர்களின் பொதுப் பயிற்சியைப் போன்றது - இது தனிப்பட்ட முறையில் செய்யப்பட்டால் நன்றாக இருகக்கும்” என பதிலளித்தார்.
ALSO READ: மாட்டிக்கொண்டது சீனா, வெளியானது கொரோனாவின் உண்மையான புள்ளிவிவரங்கள்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR