இந்திய -சீனா எல்லை பகுதியான திபெத்தில் இன்று நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9-ஆக பதிவு!

சீனாவின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தில் இன்று (சனிக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவாகியது.  

Last Updated : Nov 18, 2017, 06:09 PM IST
 இந்திய -சீனா எல்லை பகுதியான திபெத்தில் இன்று நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9-ஆக பதிவு! title=

இந்திய சீனா எல்லை பகுதியான திபெத்தில் உள்ள நியாசி என்ற இடத்தில் இந்த நில நடுக்கம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து சீன புவியியல் மையம் தரப்பில், இந்திய எல்லையோரத்தில் அமைந்துள்ள திபெத்தின் நியின்ஜி பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவாகியது” என்று கூறியுள்ளது.
  
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சீன செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முதல் நில நடுக்கம் 6.34-கும் அடுத்ததாக 8.31 மணிக்கும் நிகழ்ந்ததாக அச்செய்தி நிருவனம் தெரிவிக்கின்றன.
இந்த, நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருணாச்சல பிரதேசம், சீனாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

 

Trending News