ராணுவத்தில் வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் அளவுக்கு வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகள், ஆயுத கண்பிடிப்புகள் என அதிரடி காட்டி வருகிறது. அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தனது பாதையில் சென்றுக் கொண்டிருக்கும் வடகொரியா, இப்போது ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவிற்கு சென்றுள்ளார். வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சுமார் 1,180 கி.மீ தொலைவு இருக்கும் நிலையில் கிம் ஜாங் உன் ரயிலில் பயணம் செய்து ரஷ்யா சென்றுள்ளார்.
அணு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து தொழிற்சாலைகளை கையாளும் அவரது உயர் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் செவ்வாயன்று ரஷ்யா வந்தடைந்தார், அங்கு அவர் ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் ஒரு அரிய சந்திப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் போர் முடிவடையாமல் நீடிக்கும் நிலையில், இந்த சந்திப்பினால் மேற்கத்திய நாடுகள் பதற்றத்தில் உள்ளன.
வட கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம், கிம் ஜாங் உன் (North Korea President Kim Jong UN) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து தனது தனிப்பட்ட ரயிலில் ஏறினார் என்றும், அவருடன் நாட்டின் ஆளும் கட்சி, அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் குறிப்பிடப்படாத உறுப்பினர்களும் இருந்தனர் என்றும் கூறியது. ரஷ்யாவின் தூர கிழக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் கிம் மற்றும் புடினுக்கு இடையேயான சந்திப்பு, உலக அரங்கில் பெருகிய முறையில் தனிமைப்படுத்தப்பட்ட இரு தலைவர்களை ஒன்றிணைப்பது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | ரஷ்யாவிற்கு ரயிலில் புறப்பட்ட கிம் ஜாங் உன்... ரயிலில் இத்தனை வசதிகளா..!!
உக்ரேனில் 18 மாதங்களுக்கும் மேலான போருக்குப் பிறகு ரஷ்யாவிற்கு புதிய வெடிமருந்துகள் மற்றும் குண்டுகள் தேவைப்படுகின்றன. அதே நேரத்தில் அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக பல ஆண்டுகளாக சர்வதேச தடைகளை எதிர்கொண்ட வட கொரியா, பணம் மற்றும் உணவு ஆகியவற்றில் இருந்து ஏவுகணை தொழில்நுட்பம் என அனைத்திற்கும் பற்றாக்குறை நிலையை சந்தித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இரண்டு தசாப்தங்களாக ஐநாவின் தடைகள், குறிப்பாக அணுசக்தி திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்கு அணுகுவதைத் தடுத்துள்ள ஆயுதங்களை பியோங்யாங் பெறுவதற்கு இந்த சந்திப்பு வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
வடகொரிய அதிபர விமானத்தில் பயணம் செய்யாமல் தவிரப்பது ஏன் என்றும் பலர் மனதில் கேள்விகள் எழலாம். இதற்கு காரணம் வடகொரியாவின் பாரம்பரியம்தான். வடகொரியாவை உருவாக்கிய கிம் இல் சுங் வழக்கமாக ரயிலில் தான் பயணிப்பார். அதே பாரம்பரியத்தை பின்பற்றி தற்போது கிம் ஜாங் உன் கூட ரயிலில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த ரயில் சாதாரண ரயில் கிடையாது. இதில் மொத்தம் 20 பொட்டிகள் இருக்கின்றன. இந்த பெட்டிகள் அனைத்தும் குண்டு துளைக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாது வெடிகுண்டு தாக்குதலிலும், ராக்கெட் லாஞ்சர் தாக்குதலிலும் சேதம் ஆகாது.
மேலும் படிக்க | உலகை அச்சுறுத்தும் அணு ஆயுதப் போரின் ஆபத்து: கிம் ஜாங் உன் உத்தரவால் பரபரப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ