இலங்கை தேர்தல்கள்: வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் வெற்றிக்கான நம்பிக்கையுடன் SLPP

இலங்கையில், கோவிட் -19 தொற்று நோய்க்கு மத்தியில் நடத்தப்பட்ட தேர்தல் புதன்கிழமை அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 6, 2020, 12:22 PM IST
இலங்கை தேர்தல்கள்: வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் வெற்றிக்கான நம்பிக்கையுடன் SLPP
Zee Media

கொழும்பு: இலங்கையில் (Sri Lanka), கோவிட் -19 தொற்று நோய்க்கு மத்தியில் நடத்தப்பட்ட தேர்தல் (Elections) புதன்கிழமை அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இதில் வாக்களித்துள்ளதாக தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா தெரிவித்துள்ளார்.

வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியவுடன், SLPP நிறுவனர், தேசிய அமைப்பாளர் மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே, தங்கள் கட்சி புதிய அரசாங்கத்தை உருவாக்கத் தயாராக உள்ளது என்று கூறினார்.

மற்ற பழைய அரசியல் கட்சிகளை தோற்கடித்து உருவான குறுகிய காலத்திற்குள் ஆட்சிக்கு வந்த ஒரே கட்சியாக தனது கட்சி வரலாற்றை அமைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

"எஸ்.எல்.பி.பி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பதிவு செய்யும் என நாங்கள் நம்புகிறோம். தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால் அது மக்கள் கையில் உள்ளது," என்று அவர் கூறினார்.

அதிபர் கோத்தபயா மற்றும் பிரதமர் மஹிந்தா தலைமையில் பொருளாதாரத்தை புதுப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

முடிவுகள் வியாழக்கிழமை மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக, அதிபர் கோத்தபயா கொழும்பு புறநகர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ​​அவரது மூத்த சகோதரரும், இலங்கையின் பிரதமருமான மஹிந்தா, ஹம்பாந்தோட்டாவின் தெற்கு மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியில் வாக்களித்தார்.

முன்னாள் பிரதம மந்திரி ரனில் விக்ரமசிங்கே, “கோவிட் -19 காரணமாக நாட்டின் பொருளாதாரம் சிதைந்துள்ளது. தற்போதைய அரசாங்கம் Covid-19 தொற்றை சரியாகக் கையாளவில்லை. எங்கள் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே தற்போது மோசமான நிலையில் உள்ள பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிலைமையை சரி செய்யவும் முடியும்” என்று கூறினார்.

225 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையின் கட்டுப்பாட்டை பெரும்பான்மை வித்தியாசத்தில் மஹிந்தாவின் SLPP வெல்லும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 

ALSO READ: உதவிக்கரம் நீட்டும் இந்தியா: கோவிட்-19 நிவாரணத்திற்காக இலங்கையுடன் Currency Swap!!