இன்று வரை ரயிலையே பார்த்ததில்லை... ரயில் போக்குவரத்து இல்லாத ‘27’ நாடுகள்!

உலகின் மிகப் பழமையான போக்குவரத்துச் சாதனமாக இரயில்வே கருதப்படுகிறது. இந்தியாவில் ரயில்வே இல்லாமல் போக்குவரத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால் இன்னும் ரயில்வே நெட்வொர்க் இல்லாத பல நாடுகள் உள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 24, 2023, 01:56 PM IST
  • உலகின் 27 நாடுகளில் இன்னும் ரயில் நெட்வொர்க் இல்லை
  • நமது அண்டை நாடான பூடானின் பெயரும் இதில் அடங்கும்.
  • கத்தார், குவைத், ஓமன் போன்ற பணக்கார நாடுகளில் கூட இல்லை.
இன்று வரை ரயிலையே பார்த்ததில்லை... ரயில் போக்குவரத்து இல்லாத ‘27’ நாடுகள்! title=

உலகின் மிகப் பழமையான போக்குவரத்துச் சாதனமாக இரயில்வே கருதப்படுகிறது. இந்தியாவில் ரயில்வே இல்லாமல் போக்குவரத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்தியாவில் தினமும் சுமார் 11,000 ரயில்கள் தண்டவாளத்தில் ஓடுகின்றன. அதில் கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இது கிறிஸ்துவுக்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் தொடங்கியது. முன்னதாக இது சுரங்கத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் நீராவி இயந்திரம் வந்த பிறகு, வணிக ரீதியிலான ரயில் சேவை தொடங்கியது. இதனால் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வசதியாக இருந்தது. இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் ரயில்வே நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இன்னும் ரயில்வே நெட்வொர்க் இல்லாத பல நாடுகள் உள்ளன.

இந்தியாவில் ரயில்வே போக்குவரத்து அமைப்பு நாளுக்கு நாள் விரிவுபடுத்தப்பட்டு வருவதோடு, புதிய தொழ்ல்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. எக்ஸ்பிரஸ் ரயில்கள், சதாப்தி, ராஜ்தானி என்ற வரிசையில் சமீபத்திய வந்தே பாரத் என்ற அதிக வேக ரயில்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. ரயில் போக்குவரத்து இல்லாத நாடுகளில், நமது அண்டை நாடான பூடானும் அடங்கும். எனினும், இந்தியா பூடானில், ரயில் பாதையை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது. 57 கி.மீ நீளமுள்ள இந்த ரயில்பாதை 2026-க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் நெட்வொர்க் இல்லாத நாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ரயில் நெட்வொர்க் இல்லாத பெரும்பாலான நாடுகள் மிகச் சிறிய மற்றும் தீவு நாடுகளாகும். உதாரணமாக, அன்டோரா உலகின் 11வது சிறிய நாடு. அதே போன்று, உலக வரைபடத்தில் தோன்றிய புதிய நாடான கிழக்கு திமோர் என்ற நாட்டிலும் ரயில் பாதை இல்லை. இருப்பினும், இப்போது அங்கு ரயில் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவது குறித்து திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க நாடான கினியா-பிசாவுக்கும் ரயில் நெட்வொர்க் இல்லை. வளைகுடா நாடான குவைத்திலும் ரயில் பாதை இல்லை. ஆனால் அங்கு பல ரயில் திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நாடுகளில் பல முன்பு ரயில் நெட்வொர்க் இருந்தது. ஆனால் இழப்புகள் காரணமாக அவை மூடப்பட்டன. இதில் மால்டா மற்றும் சைப்ரஸ் ஆகியவை அடங்கும். கடினமான புவியியல் நிலைமைகள் காரணமாக பல நாடுகளில் ரயில் வலையமைப்பை உருவாக்க முடியவில்லை. இதில் ஐஸ்லாந்தும் அடங்கும்.

மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் மிக நீண்ண்ண்ட ரயில்... பெட்டிகளை எண்ணியே டயர்டாயிடும்...!!

ரயில் நெட்வொர்க் இல்லாத நாடுகள்

அன்டோரா, பூட்டான், சைப்ரஸ், கிழக்கு திமோர், கினியா-பிசாவ், ஐஸ்லாந்து, குவைத், லிபியா, மக்காவ், மால்டா, மார்ஷல் தீவுகள், மொரீஷியஸ், மைக்ரோனேஷியா, நைஜர், ஓமன், பப்புவா நியூ கினியா, கத்தார், சோலோமால் டோனான்கா, ருவாண்டா, சானியா, சுர்லாண்டிஸ், சோலோமால் டோனிகா, சோலோமால் தீவுகள், டொபாகோ, துவாலு, வனுவாட்டு மற்றும் யேமன் ஆகியவை ரயில் நெட்வொர்க் இல்லாத நாடுகளில் அடங்கும். இந்த நாடுகளில் பெரும்பாலானவை சிறிய தீவு நாடுகள். கத்தார், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் பளபளக்கும் சாலைகள் உள்ளன, எனவே ரயில்வேயின் தேவையை உணரவில்லை. இருப்பினும், கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த ஃபிஃபா கோப்பையை கருத்தில் கொண்டு மெட்ரோ நெட்வொர்க் கட்டப்பட்டது.

மேலும் படிக்க | ரயில்வே ஸ்டேஷன் ஒன்று... ஆனால் மாநிலங்கள் இரண்டு... இந்தியாவின் வினோத ரயில் நிலையம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News