'உனக்கு 12... எனக்கு 30' - அமெரிக்க அதிபர் பைடன் பேச்சால் சலசலப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தனது 30 வயதில், 12 வயது சிறுமியுடன் நட்பில் இருந்ததாக சமீபத்தில் பேசியிருந்தது சமூக வலைதளங்களில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 25, 2022, 04:17 PM IST
  • பைடன் தனது பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு, அந்த பெண் குறித்து பேசினார்.
  • இருப்பினும், அந்த பெண் குறித்தும் தெளிவாக எதவும் கூறவில்லை.
  • தொடர்ந்து, பைடனின் பேச்சை நெட்டிசன்கள் பிரித்து மேய்ந்து வருகின்றனர்.
'உனக்கு 12... எனக்கு 30' - அமெரிக்க அதிபர் பைடன் பேச்சால் சலசலப்பு title=

அமெரிக்க நாட்டு அதிபரான ஜோ பைடன், நாட்டின் மிகப்பெரிய ஆசிரியர் சங்கமான தேசியக் கல்விச் சங்கத்தில் நேற்று உரையாற்றினார். பருவநிலை மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு பெண்மணியை பைடன் கவனித்தார். பருவநிலை மாற்றம் குறித்த தனது பேச்சை பாதியில் நிப்பாட்டிய அதிபர் பைடன், அந்த பெண்ணை சுட்டிக்காட்டி,"நீங்கள் எனக்கு வணக்கம் சொல்லலாம்" என கூறினார். அதாவது, ஏற்கெனவே இருவரும் ஒருவருக்கொருவர் அறிந்தவர்கள் என தெரிந்தது. 

மேலும் படிக்க | மாமிசம் சாப்பிட்டால் நோ செக்ஸ்...ஆண்களுக்கு பாவம் செய்யும் பீட்டா அமைப்பு

தொடர்ந்து பேசிய பைடன்,"நீண்டகாலம் முன்னர், அந்த பெண்ணுக்கு 12 வயதான போது, எனக்கு 30 வயது. இருப்பினும், பல மோசமான காரியங்களை செய்துமுடிக்க அந்த பெண் எனக்கு உதவிகரமாக இருந்துள்ளார்" என வேடிக்கையாக கூறினார். சுற்றியிருந்த பார்வையாளர்களும் இதை வேடிக்கையாகவே பார்த்தனர். ஆனால், அதுகுறித்து பைடன் வேறு எந்த தகவலையும் கூறாமல் பாதியில் தனதை பேச்சை தொடர்ந்தார். இது பலருக்கு அவர் என்ன கருத்தை கூற வந்தார் என்ற ஆவலையும் ஏற்படுத்தியது. 

சமூக வலைதளங்களில் பைடனின் பேச்சு சலசலப்பை உண்டாக்கியுள்ளது. அவரின் பேச்சை சிலர் சிறுபிள்ளைத்தனமானது என விமர்சித்தனர். மேலும், சிலரோ பைடன் வழக்கம்போல் உளறுகிறார் என்றும் கூறினர். உளறுவதில் ஜோ பைடனை ஒருபோதும் தோல்வியடைய மாட்டார் என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர்,"அவர் உண்மையில் அவருக்கு 12 வயது மற்றும் அவரது ஆசிரியர் 30 வயது என்றுதான் சொல்ல வந்தார் என நான் நினைக்கிறேன். ஆனால், பேசியது பிடன் அல்லவா..." என பதிவிட்டுள்ளார். இதன்மூலம், பைடன் பேசியது யூகிக்க முடியாது என சுற்றிவளைத்து கூறியுள்ளார். 

"ஜோ பிடன் ஆசிரியர் சங்கத்திற்கு அவர் பேசியது, எங்களில் பாதி பேரை திகைக்க வைத்தது, மற்றவர்கள் முற்றிலுமாக வாயடைத்து போய்விட்டனர்" என மற்றொரு பயனர் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அந்த உரையின்போது, கருகலைப்புக்கு தடை விதிக்கக்கோரும் குடியரசுக் கட்சியினரின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கப்படும் என்றும் பைடன் பேசினார்.

மேலும் படிக்க | Fact Check! சீனாவில் ராணுவப் புரட்சியா... அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் கைதில் இருக்கிறாரா.. உண்மை என்ன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News