கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெட் கார்பெட் எனப்படும் சிவப்பு கம்பளத்தில் உலக திரை பிரபலங்கள் நடந்துசெல்லும் நிகழ்வு மிகவும் பிரபலமான ஒரு நிகழ்வாகும். இதில் பிரபலங்களின் உடைகள் முதல் அவர்களது அலங்காரம் வரை அனைத்தையும் மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.
இந்த அண்டு கேன்ஸ் திரைப்பட விழா ரெட் கார்பெட்டில், உண்மையில் உலகம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு பெண்மணி உணர வைத்தார். ரெட் கார்பெட்டில் தோன்றிய பெண் ஒருவர் உக்ரேனிய கொடியின் வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்த தனது உடலை காட்டும் வகையில், மேலாடையின்றி ஓடினார். தனது உடலில் அவர் "ஸ்டாப் ரேப்பிங் அஸ்", அதாவது 'எங்களை பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள்" என எழுதியிருந்தார்.
சிவப்பு நிறக் கறை படிந்த உள்ளாடைகளை அணிந்திருந்த அந்த பெண், உக்ரைன் மக்களின், குறிப்பாக பெண்களின் பரிதாப நிலை பற்றி உரக்கப் பேசினார். புகைப்படக்காரர்களுக்குப் போஸ் கொடுத்த அவரை பின்னர் பாதுகாப்புக் காவலர்கள் அவ்விடத்திலிருந்து அழைத்துச்சென்றனர்.
மேலும் படிக்க | உக்ரைன் எஃகு அலையை கைப்பற்றிய ரஷ்யா: சரணடைந்த 531 பணியாளர்கள்
அந்த பெண் ஏற்படுத்திய திடீர் பரபரப்பால், ஜார்ஜ் மில்லரின் "த்ரீ தவுசண்ட் இயர்ஸ் ஆஃப் லாங்கிங்க்" திரைப்படத்தின் முதல் காட்சியில் கலந்து கொள்ள வந்த விருந்தினர்களிடையே சிறு குழப்பம் ஏற்பட்டது. சிவப்பு கம்பள நிகழ்வு சிறிது நேரம் தடைபட்டது.
உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய துருப்புக்களால் முன்னர் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான கற்பழிப்பு வழக்குகள் பற்றிய தகவல்கள் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாகவும், இவற்றில் சிறு குழந்தைகளின் பாலியல் வன்கொடுமைகளும் அடங்கும் என்றும் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
செவ்வாயன்று கேன்ஸ் தொடக்க விழாவில் முன்னாள் நடிகரான ஜெலென்ஸ்கி தனது நாட்டிற்கான உதவிக்கான வீடியோ முறையீட்டைத் தொடங்கினார்.
கடந்த மாதம் உக்ரைனில் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்ட லிதுவேனியன் இயக்குனர் மன்டாஸ் குவேடராவிசியஸின் ஆவணப்படமான "மரியுபோலிஸ் 2" வியாழன் அன்று சிறப்பம்சம் வாய்ந்த படமாக திரையிடப்பட்டது. இந்த வகையில், இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் ரஷ்யா உக்ரைன் போர் ஏற்கனவே ஒரு முக்கிய கருப்பொருளாக இருந்து வருகிறது.
உக்ரைனின் பாதிக்கப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சனிக்கிழமையன்று சினிமா தொழில்துறை சந்தையான கேன்ஸ் விழாவில் சிறப்பு வாய்ப்பு கிடைக்கும். உக்ரைனின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான செர்ஜி லோஸ்னிட்சாவின், இரண்டாம் உலகப் போரில் ஜேர்மன் நகரங்களில் குண்டுவீச்சு பற்றிய படமான "தி நேசுரல் ஹிஸ்டரி ஆஃப் டிஸ்டிரக்ஷன்" என்ற படம் திரையிடப்படும்.
மேலும் படிக்க | சர்வாதிகாரர்களுக்கு மரணம் நிச்சயம்..கேன்ஸ் விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR