டோலிவுட்டின் பிரபல நடிகள் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு திரைப்படம் ‘நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா’. இப்படம் தற்போது தமிழில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள ‘நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா’.
நடிகை அனு இம்மானுவேல் இவருக்கு ஜோடியாக நடிக்க, சரத்குமார், அர்ஜுன், நதியா, தாகூர் அனூப்சிங், ஹரீஷ் உத்தமன், கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில், ரஜினியின் காலா படம் அதே நாளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து வரும் மே 4-ஆம் தேதிக்கு படம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படம் தமிழில் ‘என் பேரு சூர்யா, என் நாடு இந்தியா’ என்னும் பெயரில் தெலுங்கு படத்துடன் ஒருமித்து வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்திற்கு நாயகன் அல்லு அர்ஜூனே தமிழில் டப்பிங் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் பிறந்து வளர்ந்த அவருக்கு தமிழ் பேசுவதில் பிரச்சணைகள் இருக்காது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!