ஏடிஎம் மூலம் பணம் அனுப்புவது அல்லது எடுப்பது பற்றி தான் நமக்கு தெரியும் ஆனால் ஏடிஎம் மூலம் பிசினஸ் செய்து மாதந்தோறும் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை சம்பாதிக்க முடியும் என்பது பற்றி இங்கு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது நாம் எங்காவது ஏடிஎம் இருப்பதை பார்த்தால் என்ன நினைப்போம், இது அந்த குறிப்பிட்ட வங்கியால் நிறுவப்பட்ட ஏடிஎம் தான் இது என்று நினைப்போம். ஆனால் நாம் நினைப்பது முற்றிலும் தவறு. வங்கிகளுடன் சில நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு ஏடிஎம் கேபின்களை நிறுவுகிறது, இந்த நிறுவனங்கள் வெவ்வேறு இடங்களில் ஏடிஎம்களை நிறுவுகின்றன.
பெரும்பாலான வங்கிகளுக்கு, இந்தியாவில் ஏடிஎம் அமைப்பதற்கான ஒப்பந்தம் டாடா இண்டிகேஷ், முத்தூட் ஏடிஎம் மற்றும் இந்தியா ஒன் ஏடிஎம் ஆகியவற்றுடன் உள்ளது. அதனால் எஸ்பிஐ அல்லது வேறு ஏதேனும் வங்கிகளின் ஏடிஎம் உரிமையைப் பெற விரும்புபவர்கள் மேலே குறிப்பிட்ட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலம் உரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதேசமயம் ஏடிஎம் உரிமம் என்ற பெயரில் சில மோசடி கும்பல் மக்களை ஏமாற்றுகிறது, அதனால் கவனமுடன் செயல்பட வேண்டும். ஏடிஎம் உரிமம் பெறுவதற்கு முன்னால் உங்களிடம் என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | பான் கார்டு & பே ஸ்லிப் இல்லாமல் தனிநபர் கடன் பெறுவது எப்படி?
ஏடிஎம் கேபின் அமைக்க குறைந்தபட்சம் 50-80 சதுர அடி இடம் இருக்க வேண்டும், மற்ற ஏடிஎம்களில் இருந்து குறைந்தது 100 மீட்டர் தொலைவில் ஏடிஎம் இருக்க வேண்டும். மேலும் மக்கள் எளிதில் பார்க்கும் வகையில் இடம் இருக்க வேண்டும், 24 மணி நேரமும் மின்சாரம் இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 1 கிலோவாட் மின்சார இணைப்பும் கட்டாயம். கேபின் செங்கல் சுவர்கள் மற்றும் கான்கிரீட் கூரையுடன் கூடிய நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும் மற்றும் V-SAT ஐ நிறுவுவதற்கு சங்கம் அல்லது அதிகாரத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும்.
ஏடிஎம் அமைக்க தேவைப்படும் ஆவணங்கள்:
- ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை
- ரேஷன் கார்டு, மின்சாரக் பில்
- வங்கிக் கணக்கு மற்றும் பாஸ்புக்
- புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண்
- தேவையான பிற ஆவணங்கள்
- ஜிஎஸ்டி எண்
- நிறுவனத்திற்குத் தேவையான நிதி ஆவணங்கள்
மேலும் படிக்க | 7th Pay Commission இரட்டை பொனான்சா: அகவிலைப்படியை தொடர்ந்து பயணப்படியும் உயர்ந்தது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ