உங்கள் நிறுவனம் இபிஎஃப் கணக்கில் உங்கள் பணத்தை டெபாசிட் செய்கிறதா? எப்படி கண்டறிவது?

EPFO Update: நிறுவனம் உங்கள் பிஎஃப் பணத்தை உங்கள் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறதா என்பதை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். இதை எப்படி செய்வது?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 19, 2023, 03:00 PM IST
  • இபிஎஃப் பணம் எந்த அடிப்படையில் கழிக்கப்படுகிறது?
  • பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதா என்பதை எப்படி அறிவது?
  • உமங் செயலி மூலம் இந்த வகையில் செக் செய்யலாம்.
உங்கள் நிறுவனம் இபிஎஃப் கணக்கில் உங்கள் பணத்தை டெபாசிட் செய்கிறதா? எப்படி கண்டறிவது? title=

EPFO Update: அலுவலக பணிகளில் வேலை செய்பவர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) பணம் அவர்களின் ஓய்வூதியத்திற்கான முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் பணியாளர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள். பணியாளர் செலுத்தும் அதே தொகையை முதலாளி / நிறுவனமும் செலுத்துகின்றன. இது மறைமுகமாக பணியாளர்களுக்கு எதிர்காலத்திற்கான ஒரு நல்ல சேமிப்பாக அமைகின்றது. மிகவும் பாதுகாப்பான, நல்ல வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு முதலீட்டு திட்டமாக இது உள்ளது. 

பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனம் அவர்களது சம்பளத்தில் இருந்து பிஎஃப் பணத்தை (EPF Amount) மாதா மாதம் பிடித்தம் செய்கிறது. நிறுவனமும் இதே அளவு தொகையை டெபாசிட் செய்ய, அந்த மொத்த தொகைக்கு பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வருடாந்திர வட்டியும் கிடைக்கிறது. எனினும், இதில் பிஎஃப் உறுப்பினர்கள் பல விஷயங்களில் கண்டிப்பாக கனவம் செலுத்த வேண்டும். நிறுவனம் உங்கள் பிஎஃப் பணத்தை உங்கள் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறதா என்பதை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். இதை எப்படி செய்வது? அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இபிஎஃப் பணம் எந்த அடிப்படையில் கழிக்கப்படுகிறது?

பிஎஃப் பணத்தைக் கழிப்பதற்கான நிலையான விதி என்னவென்றால், அது ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏவில் 12 சதவீதம் என்ற கணக்கில் செய்யப்படுகிறது. இது தவிர, நிறுவனமும் தங்கள் தரப்பில் இருந்து 12 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. நிறுவனத்தால் டெபாசிட் செய்யப்படும் 12 சதவீதத்தில், நிறுவனம் 3.67 சதவீதத்தை பிஎஃப் கணக்கிலும், மீதமுள்ள 8.33 சதவீதத்தை ஓய்வூதியத் திட்டத்திலும் டெபாசிட் செய்கிறது.

பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதா என்பதை எப்படி அறிவது?

- பணியாளர்களின் கணக்கில் நிறுவனம் பணத்தை டெபாசிட் செய்கிறதா இல்லையா என்பது பற்றிய தகவலை பணியாளர்கள் தங்கள் பிஎஃப் பாஸ்புக்கில் இருந்து தெரிந்துகொள்ளலாம். 

- பாஸ்புக்கைச் சரிபார்க்க, பணியாளர்கள் முதலில் EPFO ​​போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும். இங்கே உங்கள் UAN எண் செயல்படுத்தப்பட்டுள்ளதை (ஆக்டிவேட்) உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

- இபிஎஃப்ஓ (EPFO) வலைதளத்திற்குச் சென்று, 'Our Services' டேபுக்குச் சென்று, ''for employees' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

மேலும் படிக்க | PPF திட்டத்தில் பணம் போடுகிறீர்களா? அப்படியென்றால் இதில் கவனம் தேவை

- இதற்குப் பிறகு 'member passbook' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

- அதன் பிறகு உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

- வெற்றிகரமாக லாக் இன் செய்த பிறகு, உங்கள் இபிஎஃப் இருப்பைச் சரிபார்க்க முடியும்.

- இதில் உங்கள் பிஎஃப் கணக்கின் இருப்பு, அனைத்து டெபாசிட்களின் விவரங்கள் போன்ற விவரங்களைக் காணலாம்.

உமங் செயலி மூலம் இந்த வகையில் செக் செய்யலாம்

- உமங் ஆப் பல அரசு சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது.

- EPF-க்கு, Google Play Store அல்லது Apple App Store இலிருந்து UMANG செயலியை பதிவிறக்கவும்.

- உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்.

- பின்னர், "அனைத்து சேவைகள்" டேபின் கீழ், 'EPFO' ஐத் சர்ச் செய்யவும்.

- 'பணியாளர் மைய சேவைகள்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- பின்னர் ‘பாஸ்புக்கைக் காண்க’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட UAN மற்றும் OTP ஐ உள்ளிடவும்.

- இதில் லாக் இன் செய்தவுடன் நீங்கள் உள்நுழைந்ததும், உங்கள் EPF இருப்பைக் காணலாம்.

மேலும் படிக்க | 50,100,200,500 ரூபாய் நோட்டு... ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்: உடனே தெரிந்துகொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News