New Wage | நற்செய்தி! இந்த அரசு ஊழியர்களுக்கு நாளை (அக்டோபர் 1) முதல் சம்பள உயர்வு

Employees Salary Hike Latest Update: நாளை (அக்டோபர் 1) முதல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு சார்ந்து அதிரடியான அறிவிப்பு அரசு வெளியிட்டுள்ளது. இதுக்குறித்த விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 30, 2024, 08:41 PM IST
New Wage | நற்செய்தி! இந்த அரசு ஊழியர்களுக்கு நாளை (அக்டோபர் 1) முதல் சம்பள உயர்வு title=

Dearness Allowance Latest Update: நாளை (அக்டோபர் மாதம் ஒன்றாம்) தேதி முதல், கட்டடத் தொழிலாளர்கள்,  செக்யூரிட்டி உட்பட தொழிலாளர்களுடைய குறைந்தபட்ச சம்பளம் உயர இருக்கிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

அகவிலைப்படி திருத்தம்

தொழிலாளர்களுக்கு, குறிப்பாக அமைப்புசாராத் துறையில் உள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக மத்திய அரசு அகவிலைப்படி திருத்துவதன் மூலம் குறைந்தபட்ச ஊதிய வீதங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 

விலை உயர்வு

இதன் மூலம் விலை உயர்வுக்கு ஏற்ப வாழ்க்கைச் செலவை சமாளிக்க தொழிலாளர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

ஊதிய விகிதங்களால் யாருக்கு பயன்?

கட்டிட கட்டுமானம், ஏற்றுதல் மற்றும் இறக்குதல், அவைக்காவலர், துப்புரவு,  வீட்டுப் பராமரிப்பு, சுரங்கம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களால் பயனடைவார்கள். 

புதிய ஊதிய விகிதங்கள்

புதிய ஊதிய விகிதங்கள் நாளை அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி (அக்டோபர் 1) முதல் நடைமுறைக்கு வரும். கடைசி திருத்தமானது ஏப்ரல் 2024 இல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அடிப்படை ஊதிய விகிதம் 

குறைந்த ஊதிய விகிதங்கள் திறன் நிலைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. அதாவது திறமையற்றவர்கள், பாதி திறமையானவர்கள், முழு திறமையானவர்கள் மற்றும் மிகவும் திறமையானவர்கள், அத்துடன் புவியியல் பகுதியில் ஏ, பி, சி என்று பிரிக்கப்பட்டுள்ளது. 

குறைந்தபட்ச ஊதிய விகிதம்

திருத்தத்திற்கு பிறகு, கட்டுமானம் தூய்மைப் பணி, ஏற்றுதல் மற்றும் இறக்குதல் ஆகியவற்றில் உள்ள ஏ பகுதியில் குறைந்தபட்ச ஊதிய விகிதம் ஒரு நாளைக்கு ரூ. 783 (ஒரு மாதத்திற்கு ரூ.20,358), 

பாதி திறமையானவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 868 (ஒரு மாதத்திற்கு ரூ. 22,568), 

திறமையானவர்கள், எழுத்தர்கள் மற்றும் அவைக்காவலர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 954 (ஒரு மாதத்திற்கு ரூ. 24,804), 

மிகவும் திறமையான மற்றும் வாட்ச் மற்றும் வார்டு டிவிசனில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 1035 (மாதத்திற்கு ரூ. 26,910).

அகவிலைப்படி உயர்வு

தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டில் ஆறு மாத சராசரி அதிகரிப்பின் அடிப்படையில் ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 1 வரையில் மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியை திருத்துகிறது. 

clc.gov.in இணையதளத்தில் முழு தகவல்

துறை, பிரிவுகள் மற்றும் பகுதிவாரியான குறைந்தபட்ச ஊதிய விகிதங்கள் பற்றிய விரிவான தகவல்கள், இந்திய அரசு தலைமை தொழிலாளர் ஆணையரின் மத்திய இணையதளம் clc.gov.in-ல்  கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

நாளைக்கு முதல் ஊதிய உயர்வு அமல்

தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய இந்த ஊதிய உயர்வு நாளைக்கு முதல் அமலுக்கு வருவதாகஅறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் தீபாவளி பரிசு: அகவிலைப்படி உயர்வு, டிஏ அரியர்... விரைவில் அறிவிப்பு

மேலும் படிக்க - Good News | அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்

மேலும் படிக்க - DA Hike | புதிய உத்தரவு! விரைவில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News