மாதா மாதம் ரூ. 1 லட்சம் ஓய்வூதியம்: ஜாக்பாட் பலன்களை கொடுக்கும் NPS, முழு விவரம் இதோ

NPS Calculator: ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாத வாழ்க்கையை நீங்கள் விரும்பினால், இப்போதிருந்தே அதற்காக திட்டமிட வேண்டும். ஓய்வுகாலத்தில் நியாயமான செலவுகள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 16, 2023, 06:12 AM IST
  • ஓய்வுக்குப் பிறகு, மக்களுக்குச் செலவுகளுக்கு அதிகப் பணம் தேவைப்படுகிறது.
  • உடல்நலக் குறைவு, மூப்பு போன்ற காரணங்களால் பல நோய்களுக்கான ஆபத்தும் வயதான காலத்தில் அதிகமாகும்.
  • இந்த நிலையில், மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் ஓய்வூதியப் பலன் கிடைக்கும் ஒரு திட்டம் கிடைத்தால் எப்படி இருக்கும்?

Trending Photos

மாதா மாதம் ரூ. 1 லட்சம் ஓய்வூதியம்: ஜாக்பாட் பலன்களை கொடுக்கும் NPS, முழு விவரம் இதோ title=

NPS Calculator: பணி ஓய்வு பெறும் நபர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மிகச்சிறந்த தேர்வாக உள்ளது. மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் அனைத்து அரசு அல்லது தனியார் ஊழியர்களும் முதலீடு செய்யலாம். பணி ஓய்வுக்குப் பின்னும் வாழ்க்கை கவலைகள் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வழிவகை செய்யும் ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்பதே உழைக்கும் வர்க்கத்தின் கனவாக உள்ளது. இதற்காக பலரும் பல வித பெரிய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். நன்றாக யோசித்து முதலீடு செய்கிறார்கள், நிதி ஆலோசகர்களுடன் ஆலோசித்து திட்டங்களை தேர்வு செய்கிறார்கள். ஏனென்றால், ஓய்வுக்குப் பிறகு, மக்களுக்குச் செலவுகளுக்கு அதிகப் பணம் தேவைப்படுகிறது. உடல்நலக் குறைவு, மூப்பு போன்ற காரணங்களால் பல நோய்களுக்கான ஆபத்தும் வயதான காலத்தில் அதிகமாகும். இந்த நிலையில், மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் ஓய்வூதியப் பலன் கிடைக்கும் ஒரு திட்டம் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாத வாழ்க்கையை நீங்கள் விரும்பினால், இப்போதிருந்தே அதற்காக திட்டமிட வேண்டும். ஓய்வுகாலத்தில் நியாயமான செலவுகள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தச் செலவுகளைச் சந்திக்க, உங்களிடம் மாத வருமான ஆதாரம் இருக்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme) சிறந்த வழியாக இருக்கும். இந்தத் திட்டத்தின் உதவியுடன், முதுமைகாலத்தை மகிழ்ச்சியான முறையில் கழிக்க போதுமான நிதியை திரட்ட முடியும்.

NPSல் மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவது எப்படி?

ஓய்வு காலத்திக் ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் ஓய்வூதியமாக பெறுவது ஒருவரது இலக்கு என்று வைத்துக்கொள்வோம். அந்த இலக்கை அடைய அந்த நபர் என்பிஎஸ் -இல் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை இங்கே விளக்கமாக காணலாம். உதாரணமாக இப்போது 25 வயதுள்ள ஒரு நபர் இதற்கு திட்டமிடுகிறார் என்றால், அவருக்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கால அவகாசம் 35 ஆண்டுகள் கிடைக்கும். இந்தக் கணக்கீட்டிற்கு SBI பென்ஷன் ஃபண்டின் NPS கால்குலேட்டரைப் பயன்படுத்துகிறோம்.

- NPS இல் மாதாந்திர முதலீடு: ரூ 12,000
- 35 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ 45 லட்சம்
- மதிப்பிடப்பட்ட வருமானம்: 10 சதவீதம்
- முதிர்வுக்கான மொத்தத் தொகை: ரூ 4.5 கோடி
- வருடாந்திர தொகை: 45% (ரூ 2.0 கோடி)
- மதிப்பிடப்பட்ட வருடாந்திர விகிதம்: 6 சதவீதம்
- 60 வயதில் ஓய்வூதியம்: மாதம் ரூ.1.07 லட்சம்

மேலும் படிக்க | இனிமேல் வெயிட்டிங்கே இல்ல! துரிதமாய் செயல்படும் இந்தியன் ரயில்வேயின் அடுத்தகட்ட நடவடிக்கை

NPS இல் ஆனுவிட்டி அதாவது ஆண்டுத் தொகை  என்றால் என்ன?

ஒருவர் NPS இல் முதலீடு செய்தால், அவர் 40 சதவிகித வருடாந்திர தொகையை எடுக்க வேண்டும். ஆண்டுத் தொகையில் இருந்துதான் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுவீர்கள். இங்கு செய்யப்பட்ட கணக்கீட்டில், 45 சதவீதம் ஆண்டுத் தொகை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விகிதம் 6 சதவீதம் ஆகும். அதாவது ஓய்வூதிய நிதியில் 45 சதவீதம் ஆண்டுத் தொகைக்கு செல்லும்.

ஒருவரது ஆனுவிட்டி அதிகமாக அதிகமாக அவரது ஓய்வூதியமும் அதிகமாகும். என்பிஎஸ்-ல் 40 சதவீதம் ஆண்டுத் தொகையை எடுக்க வேண்டியது அவசியம். NPS இல் முதலீடு செய்வது வருமான வரிச் சட்டத்தின் 80CCD(1B) பிரிவின் கீழ் ரூ. 50,000 வரையிலான வரி விலக்கு நன்மையையும் வழங்குகிறது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக எழுதப்பட்டது. இங்கே SBI ஓய்வூதிய நிதியத்தின் NPS கால்குலேட்டரிலிருந்து தோராயமான விவரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. முதலீடு செய்வதற்கு முன், நிச்சயமாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.

மேலும் படிக்க | 2023ல் அதிகம் புழங்கப்பட்ட கிரிப்டோ கரன்சிகள்! லிஸ்ட்டில் இடம் பெற்ற டிஜிட்டல் பணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News