ICICI வங்கி வட்டி விகிதங்கள் உயர்ந்தன! FD வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி

Rate Of Interest Revised: நீண்டகால வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டன...  பொது மக்கள், மூத்த குடிமக்கள், வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களைச் சரிபார்க்கவும் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 23, 2023, 04:13 PM IST
  • ICICI வங்கி நீண்டகால வைப்புத் தொகைக்கான வட்டி விகிதள்
  • வட்டி விகிதங்களைச் சரிபார்க்கவும்
ICICI வங்கி வட்டி விகிதங்கள் உயர்ந்தன! FD வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி title=

புதுடெல்லி: பெரும்பாலான மக்கள் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர்.  இந்நிலையில் தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி, பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான டெபாசிட்களுக்கு வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் புதிய வட்டி விகிதங்கள் இன்று (23 நவம்பர் 2023) முதல் அமலுக்கு வருவதாக வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைப்புத் தொகைக்கான ஆண்டு வட்டி விகிதங்கள் (Interest rates (per cent per annum) என்பது நவம்பர் 23, 2023 முதல் அமலுக்கு வருகிறது.

ஐசிஐசிஐ வங்கியின் வைப்புத் தொகையில் 2 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேலான வங்கி ஃபிக்சட் டெபாசிட்களுக்கு இந்த வட்டி விகித மாற்றங்கள் பொருந்துகின்றன.

interest rate

கடந்த இரண்டு நாட்களில் பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தங்களுடைய நிலையான வைப்பு வட்டி விகிதங்களை (Fixed Deposit Rates) திருத்தியுள்ளன. தனியார் துறை கடனாளியான யெஸ் வங்கி ரூ.2 கோடிக்கு குறைவான டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது.

யெஸ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது பல முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. யெஸ் பேங்க் குறிப்பிட்ட காலத்திற்கான 2 கோடி ரூபாய் வரையிலான நிலையான வைப்புத்தொகைக்கு (Fixed Deposit Interest Rate) டெபாசிட்களுக்கு 25 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) வரை நிலையான வைப்பு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.

இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, வங்கி சாதாரண குடிமக்களுக்கு 3.25% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. யெஸ் வங்கி இணையதளத்தில் உள்ள தகவல்களின் படி, மூத்த குடிமக்களுக்கு வங்கி 3.75% முதல் 8.25% வரையிலான வட்டியை வழங்குகிறது. புதுப்பிக்கப்பட்ட YES பேங்க் விகிதங்கள் நவம்பர் 21, 2023 முதல் அமலுக்கு வந்தது.

மேலும் படிக்க | PM Kisan பயனாளிகளுக்கு ஜாக்பாட் செய்தி, விவசாயிகளின் கணக்கில் ரூ.6000

பொதுத்துறை கடனாளியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) அதன் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை 2 கோடி ரூபாய்க்குக் கீழே மாற்றியுள்ளது. வங்கி 1 வருடத்திலிருந்து 2 வருடங்கள் (444 நாட்கள் தவிர) FDகளுக்கான வட்டி விகிதத்தை 30 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தியிருந்தாலும், 444 நாட்கள் FD மீதான வட்டி விகிதங்களை 15 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.

இந்த நிலையில், ICICI வங்கி நீண்டகால வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைக்கிறது: பொது மக்கள், மூத்த குடிமக்கள், தவணைக்காலம் மற்றும் பிற விவரங்களுக்கான வட்டி விகிதங்களை திருத்தி அமைத்துள்ளது.

கனரா வங்கி (Canara Bank):
அதேபோல, கனரா வங்கி மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட FDக்கு 7.30 சதவீத வட்டி அளிக்கிறது. ரூ.1 லட்சம் தொகையை மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 24 ஆயிரம் ரூபாய் வட்டி கிடைக்கும்.

மேலும் படிக்க | Aadhaar Card: ஆதார் கார்ட் தொடர்பாக முக்கிய அப்டேட் வெளியிட்ட மத்திய அரசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், ஆயிலகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News