RBI Update: இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும், சிறு வணிகர்களுக்கும் மிகப்பெரிய நல்ல செய்தியை அளிக்கவுள்ளது. அதற்கான பணிகளில் ஆர்பிஐ ஈடுபட்டுள்ளது. தங்களது பல வித தேவைகளுக்காக விவசாயிகளும் சிறு வணிகர்களும் அவ்வப்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெருகிறார்கள். அப்படி கடன் பெறும்போது இவர்கள் பல வித பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர ரிசர்வ் வங்கி ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியது. யுபிஐ (UPI) போன்ற ஒரு தளத்தை உருவாக்கி அதன் மூலம் கடன் பெறும் வசதியை விவசாயிகளுக்கும், எம்எஸ்எம்இ அதாவது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.
கடன் பெறுவதில் உள்ள சிக்கல்
விவசாயிகளும் (Farmers) சிறு குறு வணிகர்களும் கடன் பெறுவதில் பல வித பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறார்கள். டிஜிட்டல் தளங்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் கடன் பெறும் வழிகள் தற்போது மிகப் பிரபலமாகி வந்தாலும் பெரும்பாலான விவசாயிகளும், சிறு வணிகர்களும் கடன்களை பெற வங்கிகளுக்கு (Banks) தான் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கூறுகிறது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள கடன் வழங்கும் தளம், டிஜிட்டல் தளங்களுக்கு யுபிஐ வேலை செய்யும் அதே வகையில் வேலை செய்யும். இது விவசாயிகள் மற்றும் MSME-களுக்கான கடன் பெறும் முறையை எளிதாக்கும்.
இதற்கான செயல்முறை எப்படி இருக்கும்?
இந்த தளம் நிதி கடன்களுக்கான பொது தொழில்நுட்ப தளம் அதாவது PTPFC மூலம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த தளம் விவசாயி கடன்கள், கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card), சிறு MSME கடன்கள் போன்றவற்றில் செயல்பட்டு வருகிறது. இந்த தளத்துடன் கடன் அளிக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஸ்டார்ட்டர்கள் ஆகியவற்றை இணைக்கலாம். இந்த தளம் வழியாக இதுவரை ரூ.3,500 கோடி அளவிலான விவசாய மற்றும் MSME கடன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மிக விரைவில் கடன் பெறலாம்
ஆர்பிஐ (RBI) மூல முன்மொழியப்பட்ட இந்த கடன் தளம் மூலம் விவசாயிகள் மற்றும் MSME-களுக்கு மிக விரைவில் கடன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கடன் செயல்முறையை இந்த தளம் எளிதாக்கும். இப்போது கடன்களை பெறவும் அல்லது கிசான் கிரெடிட் கார்டுகளை பெறவும் வங்கிகளுக்கும், நில பதிவேடு வைத்திருக்கும் துறை அலுவலகங்களுக்கும் விவசாயிகள் பலமுறை செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த தளம் வந்து விட்டால் இந்தப் பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் நிமிடங்களில் விவசாயிகளால் கடன் பெற முடியும்.
PPI -இன் பிற வசதிகள்
இது தவிர மற்றொரு மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி செய்துள்ளது. இனி வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களால் வழங்கப்படும் பிபிஐ-கள் மூலம் பொதுப் போக்குவரத்து அமைப்புக்கான (Public Transport System) கட்டணங்களையும் செலுத்த முடியும் என மத்திய வங்கி கூறியுள்ளது.
பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தும் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு பொது போக்குவரத்து அமைப்புகளில் கட்டணங்களை செலுத்த பயன்படும் வகையில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்கள் PPI-ஐ அறிமுகம் செய்ய அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு ஒரு மிக நல்ல செய்தியாக வந்துள்ளது.
மேலும் படிக்க | Post Office RD: ரூ.3000 முதலீடு... ரூ.2,14,097 வருமானம் தரும் ஜாக்பாட் திட்டம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ