ஒவ்வொரு நபரும் தங்களது எதிர்கால தேவையை கருதி பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர், ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேவைக்காக முதலீடு செய்கின்றனர். சம்பாதிக்கும் காலத்தில் ஒருவருக்கு பெரிய அளவில் வருமானம் தேவைப்படாது, அதுவே ஓய்வுக்கு பின்னர் ஒருவரால் இளம் வயதில் இருந்தது போல சம்பாதிக்க முடியாது. இதன் காரணமாக மக்கள் பலரும் ஓய்வூதியம் கிடைக்கும் வகையிலான திட்டத்திலேயே முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மூத்த குடிமகன்களுக்காக அரசாங்கம் ஒரு சிறந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது, இதில் பங்களிப்பதன் மூலம் முதலீட்டாளருக்கு சிறந்த அளவில் ஓய்வூதியம் கிடைக்கும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத அரியர் தொகை கிடைக்கவுள்ளதா? சமீபத்திய அப்டேட் இதோ
மூத்த குடிமக்களுக்கான அரசு வழங்கும் இந்த பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனாவில் (PMVVY) திட்டத்தில் 60 வயதிற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூ.18500 ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசாங்கம் மானியத்துடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர ஓய்வூதிய வசதி வழங்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் மொத்தமாக ரூ.15 லட்சம் டெபாசியிட் செய்ய வேண்டும்.
PMVVY திட்டத்தில் நீங்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பங்களிக்க வேண்டும் மற்றும் முதலீட்டாளர்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் தொகையை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தில் முதலீட்டாளருக்கு குறைப்பட்ச ஓய்வூதியமாக ரூ.1000 முதல் அதிகபட்ச ஓய்வூதியமாக ரூ 9250 வரை கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,62,162, காலாண்டு ஓய்வூதியம் ரூ.1,61,074, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.1,59,574 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,56,658 ஆகும். இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்ச கொள்முதல் விலை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15 லட்சம், காலாண்டு ஓய்வூதியம் ரூ.14,89,933, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.14,76,064 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.14,49,086 ஆகும்.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! 18 மாத DA நிலுவைத் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ