புதுடெல்லி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, ஆன்லைன் மூலம் உரையாற்றினார். கொரோனா பரவல் இருந்தாலும், சர்வயோக தினம் கொண்டாடுவதில் மக்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். பார்க்கப்போனால், இந்த நோய்த்தொற்று யோகா மீதான உலகத்தின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
நமது ரிஷிகளும், முனிவர்களும் நமக்கு அளித்த யோகக்கலை இன்று நமக்கு மாபெரும் பரிசாக இருக்கிறது. இந்த கொரோனாக் காலத்தில் இந்தியா உட்பட பல நாடுகள் மாபெரும் சுகாதார சங்கடத்தை எதிர்கொண்டுள்ளன.
இந்த சங்கடமான சூழ்நிலையில் பல விஷயங்களை மக்கள் மறந்துவிட்டனர். ஆனால், யோகக்கலை மீதான மக்களின் விருப்பம் அதிகரித்துள்ளது. தினசரி வாழ்வில் யோகாவை தினசரி வாழ்க்கையில் கடைபிடிக்கத் தொடங்கிவிட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்று பிரதமர் தெரிவித்தார்.
Also Read | Power of Yoga: மனோரீதியான பாதிப்பை குறைக்கும் யோகா
இன்றைய கடுமையான சூழ்நிலையில் மன அழுத்தங்களையும், உடல் ஆரோக்கியத்தையும் யோகா அதிகரித்துள்ளது. சுகாதார முன்களப் பணியாளர்களிடம் பேசினால், அவர்கள் தினசரி யோகா செய்வதாக சொல்வதை கேட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
நோய் தடுப்பு மற்றும் வெகுஜன சுகாதாரத்தில் ஊக்குவிக்கும் பங்கை யோகா தொடரும் என்று தான் உறுதியாக நம்புவதாக பிரதமர் தெரிவித்தார். யோகா தொடர்பான இந்தக் கருத்தை டிவிட்டரிலும் பிரதமர் பதிவிட்டுள்ளார்:
I am sure, Yoga will continue playing its preventive, as well as promotive role in healthcare of masses.
- PM Shri @narendramodi.#YogaDay pic.twitter.com/cemOCxzecX
— Mann Ki Baat Updates मन की बात अपडेट्स (@mannkibaat) June 21, 2021
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய யோகாவை பரிந்துரைக்கின்றனர் என்று கூறிய பிரதமர், திருக்குறளை மேற்கோள் காட்டி, யோகாவைப் பற்றி எடுத்துரைத்தார். பிரதமர் நரேந்திர மோடி,
”நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்ற திருக்குறளின் விளக்கத்தையும் அளித்தார்.
International yoga day 2021: சர்வதேச யோகா தினம்
நோய் ஏதேனும் இருந்தால், அதை கண்டறிந்து அதன் வேரை கண்டறிந்து, அதை போக்குங்கள், அதுவும் உடலுக்கு ஏற்றாற்போல செய்யவேண்டும் என்று தமிழ் முனி திருவள்ளுவர் தெரிவித்திருக்கிறார். யோகாவும் அதைத்தான் செய்கிறது என்று கூறினார்.
மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கும்போது, பல ஆசிரியர்கள், சிறிது நேரம் யோகா செய்யச் சொல்கின்றனர். யோகா செய்வது மன அழுத்தத்தைப் போக்கும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று பிரதமர் தெரிவித்தார்.
Also Read | International Yoga Day 2021: 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR