NEET:மருத்துவ படிப்பை தவறவிட்டேன்; ஆனால் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கிறது - மேஜர்

"MBBS படிப்பில் சேர இரண்டு முறை முயற்சித்தும் தவறவிட்டேன், ஆனால் இந்திய ராணுவத்தில் மிகவும் உயர்ந்த பதவி கிடைத்தது" நீட் நுழைவுத்தேர்வு தொடர்பாக ஓய்வுபெற்ற இராணுவ மேஜரின் ஊக்கமளிக்கும் செய்தி

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 17, 2021, 07:58 AM IST
  • மருத்துவ படிப்பை தவறவிட்டேன்
  • வாழ்க்கை சிறப்பாகவே இருக்கிறது
  • ஓய்வு பெற்ற மேஜரின் ஊக்கமளிக்கும் அனுபவம்
NEET:மருத்துவ படிப்பை தவறவிட்டேன்; ஆனால் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கிறது - மேஜர் title=

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நீட் நடைபெற்று சில தினங்களே ஆகின்றன. நீட் அச்சத்தால் சில மாணவர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளையும் எடுக்கின்றனர். அச்சம் எதற்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இது எதிர்காலத்தைப் பற்றிய பயம், ஒருவிதமான ஊக்கக்குறைவு என சொல்லலாம். ஆனால், மருத்துவ படிப்பு ஒன்று மட்டுமே வாழ்க்கையில்லை என்ற நிதர்சனத்தை மாணவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்ற குழப்பமும் அதிர்ச்சியும் நிலவுவதையும் காண முடிகிறது. 

இந்த விஷயத்தை மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும், ஏன் சமுதாயம் முழுவதற்கும் புரிய வைக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். வெறும் வார்த்தைகள் மட்டுமே இதை செய்துவிடுமா? அதிலும், சொல்வதை யார் சொல்கிறார்கள் என்பதிலும் விஷயத்தை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இரு முறை முயற்சி செய்தும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர முடியவில்லை என்றாலும், ராணுவத்தில் உயர் பதவியில் சேர்ந்து நாட்டிற்கு பணியாற்றிய ஒரு மேஜர் சொன்னால் அது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

மதன் குமார், இந்திய இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர், முன்பு எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவில், படிப்பில் கவனம் செலுத்தினார். ஆனால் தன்னுடைய கனவு நனவாகவில்லை என்றாலும், வாழ்க்கை தனக்கு மற்றொரு உச்சத்தை தயாராக வைத்திருந்த உண்மையை மாணவர்களுக்க்காக பகிர்ந்துக் கொள்கிறார் மேஜர் மதன் குமார். 

Also Read | முதலமைச்சராக நீட்டை எதிர்த்த மோடி, இப்போது மெளனமாக இருப்பது ஏன்?

 "தோல்விக்கு தற்கொலை தீர்வல்ல. பரீட்சை என்பது தேர்ச்சிகான ஒரு பொதுவான விசயம். எந்தவொரு தொழில் படிப்பை படிக்கவும் நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டியிருக்கும். வெற்றிக்கு இருக்கும் அதே அளவிலான வாய்ப்புகள் தோல்விக்கும் இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். இருக்கும் பல படிப்புகளில் மருத்துவ படிப்பும் ஒன்று என்ற நிதர்சனத்தை புரிந்துக் கொள்ள வேண்டும் வேறு பல தொழில் படிப்புகளுக்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளதை புரிந்துக் கொள்ள வேண்டும் " என்று அவர் கூறுகிறார். 

துரதிருஷ்டவசமான சூழ்நிலைகளால், மருத்துவ நுழைவுத் தேர்வில் தன்னால் தேர்ச்சி பெறமுடியவில்லை என்று தனது சொந்தக் கதையைப் பகிர்ந்து கொள்கிறார் மேஜர். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.  

1997 ஆம் ஆண்டில், மதன் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, MBBS நுழைவுத் தேர்வுகளுக்கு கடுமையாக தயாரானார். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடகாவில் நுழைவுத் தேர்வுகளை எழுதினார். கட்ஆஃப் மதிப்பெண்ணை விட ஒன்பது மதிப்பெண்கள் குறைவாகவே கிடைத்தது. ஆனால், முயற்சியை கைவிடாமல், அடுத்த ஒரு வருடம் மீண்டும் மும்முரமாக படித்து தனது மதிப்பெண்களை அதிகரிக்க முயன்றார்.

Also Read | NEET மசோதா நீட்டாக ஒருமனதாக நிறைவேறியது

சென்னையில் தேர்வு மையத்திற்கு செல்லும்போது விபத்தில் சிக்கியதால் தேர்வை எழுதமுடியுமா என்ற பதட்டம் ஏற்பட்டது. ஆனால் அடிப்படை முதலுதவி பெற்ற பிறகு அவர் தேர்வை எழுதினார். அவரது இரண்டாவது முயற்சியில், கட்ஆப் மதிப்பெண்ணில் 7 குறைந்ததால் பொது மருத்துவத்தில் இடம் கிடைக்கவில்லை. 

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் கால்நடை, பல் அல்லது விவசாயப் படிப்புகளுக்கு தகுதி பெற்றார். பிறகு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால், மதன் பொறியியல் படிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் அறிவுறுத்தினார்கள். மதனின் தந்தையும் சகோதரரும் எஞ்சினியர் என்பதால் அவர்களின் ஆலோசனை பொறியியல் படிப்பாக இருந்தது. 

பிறகு டெக்ஸ்டைல் டிசைனிங் பாடப்பிரிவில் பி.டெக் முடித்த பிறகு, ராணுவத்தில் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் ((SSC(Short Service Commission))மற்றும் சிடிஎஸ் (CDS(Combined Defence Services)) தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 73 வது இடத்தைப் பிடித்தார். பின்னர் ராணுவத்தில் இணைந்து, நாட்டுக்காக பணியாற்றி விருப்பப் பணி ஓய்வு பெற்றார்.

READ ALSO | NEET vs Counseling: நீட் எழுதிய மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் கவுன்சிலிங்

ஜீ மீடியாவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் மேஜர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்கிறார், ”இரண்டாவது முறை எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு நடைபெற்ற நாளில் விபத்தில் சிக்கியபோது, நான் உண்மையில் உடைந்து போனேன். ஏனென்றால், என்னுடைய நண்பர்கள், சகாக்களுக்கு வாய்ப்பு கிடைக்குமே? என்ற அழுத்தம் ஏற்பட்டது. ஒரு வருடம் செலவளித்த படித்தது வீணாகிவிட்டதே என்ற உணர்வு என்னை சோர்ந்து போகச் செய்தாலும், ராணுவத்தில் சேர்வதற்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றபோது மகிழ்ச்சியை ருசித்தேன்” 

உண்மையில் MBBSக்கு தகுதி பெற்று மருத்துவராக பணியாற்றியிருந்தாலும், நான் இன்று இருக்கும் அளவு மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்வேன். எப்பொழுதும் நமக்கு ஏதாவது நல்லது காத்திருக்கிறது என்று இளைஞர்கள் நம்ப வேண்டும்” என்று சொல்கிறார் மேஜர்.

நீட் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தோல்வியைக் கண்டு நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்துகிறார், உயிரி தொழில்நுட்பம், கால்நடை மருத்துவம், துணை மருத்துவ படிப்புகள், தடயவியல் மற்றும் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி போன்ற பல துணைத் துறைகளில் பிரகாசமான வாய்ப்பு இருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மேஜர் மதன் அறிவுறுத்துகிறார்.  

தமிழகத்தில் கவுன்சிலிங் அல்லது உதவி தேவைப்படும் மாணவர்கள், நிபுணர்களின் உதவி மற்றும் ஆலோசனைகளுக்காக, அரசின் கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண் '104' ஐ அழைக்கவும்.

Also Read | நீட் பயத்தால் மற்றுமொரு தற்கொலையா? உண்மை என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News