பிரதமர் நரேந்திர மோடி மீது 'ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை' முன்வைத்து, ரபேல் ஒப்பந்தத்தில் நாட்டை தவறாக வழிநடத்தியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் பாதுகாப்பு ஒப்பந்தங்களின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புவதன் மூலம் வெளிநாடுகளில் நாட்டின் பிம்பத்தை புண்படுத்திய காங்கிரஸ் தலைவர்களின் அப்பட்டமான பொய் தற்போது அம்பலமாகியுள்ளது என பாஜக செயற்குழு தலைவர் JP நட்டா தெரிவித்துள்ளார். மேலும் பாரத பிரதமர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக காங்கிரஸார் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் பாஜக தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனியன்று(இன்று) நாடுதழுவிய ஆர்ப்பாட்டத்தில் பாஜக-வினர் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் மும்பையில், பாஜக தொண்டர்கள் ஒன்றுகூடி, ராகுல் மற்றும் காங்கிரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர், பிரதமர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரிடம் கேட்டுக் கொண்டனர்.
Maharashtra: BJP holds a protest in Mumbai, demanding an apology from Rahul Gandhi after Supreme Court dismissed #Rafale review petitions. pic.twitter.com/OQKavfLYUd
— ANI (@ANI) November 16, 2019
மேற்கு வங்க தலைநகரில் நடைப்பெற்ற போராட்டத்தில், பாஜக தொண்டனர்கள் குறித்து இந்த பிரச்சினையில் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என கூறி ஒரு போராட்டத்தின் போது ராகுலின் சுவரொட்டிகளைக் கிழித்துத் தகர்த்தனர்.
மும்பையில் பாஜக நடத்திய போராட்டத்தின் படங்களை செய்தி நிறுவனமான ANI வெளியிட்டுள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை, காவி கட்சி நவம்பர் 16-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் அதன் உறுப்பினர்கள் வீதிகளில் இறங்கி காங்கிரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சி, 2019 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ரபேல் ஊழலை முன்னெடுத்து தனத் பிரச்சாரத்தை மேற்கொண்டது. குறிப்பாக, ராகுல் காந்தி தனது தேர்தல் பேரணிகளில் பிரதமர் மோடியை 'திருடன்' என்று அழைக்கும் அளவிற்கு சென்றிருந்தார்.
ரபேல் ஒப்பந்தில் ஆளும் பாஜக அரசு ஊழலில் ஈடுப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அரசிற்கு எதிராக நீதிமன்றத்தின் உதவியையும் நாடியிருந்தார்.
முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு ஏதும் நிகழவில்லை என கடந்த 2018-ஆம் ஆண்டு டிச.,14 ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் மனுக்களை தாக்கல் செய்தனர். ரபேல் தொடர்பாக ஊடகங்களில் கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் மறு ஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறையிடப்பட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக்கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்துதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி ஒத்திவைத்தனர். 6 மாதங்களுக்கு பின்னர் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், ரபேல் மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Delhi: BJP workers and leaders holds a protest outside AAP office, demanding an apology from Arvind Kejriwal after Supreme Court dismissed #Rafale review petitions. pic.twitter.com/01i2Z4KXlo
— ANI (@ANI) November 16, 2019
மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என கூறியுள்ள நீதிபதிகள், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக FIR பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டனர். இதன் மூலம், ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறுவதற்கு முகாந்திரம் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் உண்மை நிலைநாட்டப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். முடிவெடுப்பதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையை பின்பற்றுவதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது பாஜக-விற்கு எதிராக போர் கொடி தூக்கிய காங்கிரஸார் மற்றும் கட்சியின் மூன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக தொண்டர்கள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.