Benefits of Flax Seeds: இன்றைய அவசர உலகில் நாம் பல வித நோய்களுக்கு ஆளாகிறோம். நோய்களைத் தடுக்க, உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். உணவின் சுவையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், ஆரோக்கிய பண்புகள் அதிகம் உள்ள உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்கலாம்.
ஆளி விதைகள்
ஃப்ளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளி விதைகள் அத்தகைய ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். சந்தையில் பல வகையான விதைகள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் ஆளிவிதை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆளிவிதையில் (Flaxseeds) நார்ச்சத்து, புரதச்சத்து, தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இது உடலில் ஏற்படும் பல வித பிரச்சனைகளை சரி செய்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. ஆளிவிதையை சாப்பிட சரியான முறை என்ன? இதன் பலன்கள் என்ன? இவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
ஆளி விதைகளை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:
- ஆளி விதைகள் மிகச்சிறந்த ஆற்றல் மூலமாக இருப்பது அவற்றின் மிகப்பெரிய நன்மையாக பார்க்கப்படுகின்றது. அதீத பணிகளால் நாள் முழுதும் ஒருவர் சோர்வாக உணர்ந்தால், அவர் மாலையில் வறுத்த விதைகளை சாப்பிடலாம். இதன் மூலம் சில நிமிடங்களில் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். ஆளி விதைகளில் உள்ள புரதச்சத்து சோர்வை நீக்க உதவுகிறது.
- ஆளி விதைகளில் ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து அதை கூர்மைப்படுத்த உதவுகின்றன. சிந்திக்கும் திறனையும், புரிந்துகொள்ளும் திறனையும், அறிவாற்றலையும் ஆளிவிதைகள் அதிகரிக்கின்றன.
மேலும் படிக்க | Men's Health: விந்தணு பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும்... சூப்பர் விதைகள்
- கெட்ட கொலஸ்ட்ராலைக் (Cholesterol) கட்டுப்படுத்துவதிலும் ஆளி விதைகள் உதவுகின்றன. தினமும் ஒரு ஸ்பூன் வறுத்த ஆளி விதைகளை உட்கொண்டால், இரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட கொழுப்பு உடனடியாக வெளியேறத் தொடங்குகிறது.
- ஆளிவிதை எடையைக் குறைப்பதில் (Weight Loss) மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதன் மூலம் இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்துகிறது. ஆளி விதைகளை உட்கொள்வதால் அடிக்கடி பசி எடுக்கும் பிரச்சனையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
- வழக்கமான முறைகளில் வயிறு சுத்தமாகவில்லை என்றால், அதற்கும் ஆளி விதைகளை பயன்படுத்தலாம். நாள்பட்ட மலச்சிக்கல் (Constipation) உள்ளவர்களும் ஆளி விதைகளை உட்கொண்டு அதை குணப்படுத்தலாம்.
- ஆளிவிதையை உட்கொள்வது சரும ஆரோக்கியத்தையும் (Skin Care) மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தையும் (Hair Care) மேம்படுத்தும். இதில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள் முடி மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும். ஆளிவிதைகள் மூலம் சேதமடைந்த கூந்தலுக்கு வலுவும் பளபளப்பும் கிடைக்கின்றன. சருமத்தையும் இது மேம்படுத்துகின்றது.
- ஆளிவிதையில் உள்ள மெக்னீசியம் மன அழுத்தத்தைக் (Mental Tension) குறைத்து நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.
ஆளி விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்?
- ஆளி விதைகளை (Flax Seeds) எப்போதும் வறுத்த பின்னரே சாப்பிட வேண்டும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.
- ஆளிவிதையை பச்சையாக உண்பதால் அதன் முழு பலன்கள் கிடைக்காது.
- வறுத்த ஆளிவிதை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளதோடு, சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
மேலும் படிக்க | குழந்தை அறிவாளியாக - ஆரோக்கியமாக பிறக்க... கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டியவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ