உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலோ அல்லது நோய்வாய்ப்படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டாலோ உடனே நம் டயட் லிஸ்டில் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான உணவு பொருள், பேரிச்சம்பழம். பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் சிறியதாக இருந்தாலும் இதில் அடங்கியுள்ள நன்மைகள் உடலில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தும் என மருத்துவர்களால் கூறப்படுகிறது. இவற்றை இனிப்பிற்காக மட்டுமில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்காகவும் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக ஒரு நாளைக்கு மூன்று பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டும் என்பதும் அவர்களின் கூற்றாக இருக்கிறது. அப்படி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா? இங்கு பார்ப்போம்.
புரதச்சத்து:
“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்று கூறுவர். அதுபோல பேரிச்சம் பழங்கள் பார்ப்பதற்கு அளவில் சிறியதாக இருக்கலாம் ஆனால் இதனுள் எண்ணிலடங்கா புரதச்சத்துக்கள் இருக்கிறது. பொட்டாசியம், மக்னிசியம், வைட்டமின் பி6 மற்றும் பைபர் சத்துக்கள் போன்றவை ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் பேணி காக்க உதவும். உடலில் இருக்கும் அணுக்களை பாதுகாக்கும் சத்துக்களும் பேரிச்சம்பழத்தில் உள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செரிமான பிரச்சனைகள்:
பேரிச்சம் பழத்தில் கவனிக்க கூடிய வகையில் இருக்கும் இன்னொரு சத்து, செரிமான கோளாறுகளை நிவர்த்தி செய்வதாகும். இதில் அதிக பைபர் சத்துக்கள் இருப்பதால் இயற்கையாகவே மலச்சிக்கலை நீக்க உதவுவதாக மருத்துவர்கள் தரவில் கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகம் சிலரை நடத்திய ஆய்வில், அவர்களுக்கு பேரிச்சம்பழம் சாப்பிட்ட ஒரு சில நாட்களிலேயே குடல் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆற்றல்:
உடலுக்கு இயற்கையாகவே ஆற்று தேவைப்படும் போது பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இதில் இருக்கும் கார்போஹைட்ரேட், இயற்கை சர்க்கரை கனிமங்களான குளுக்கோஸ் உள்ளிட்டவை உடல் நீண்ட நேரம் செயல்பட ஆற்றல் அளிக்கிறது. இதனால் தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் அதற்கு முன்னர் பேரிச்சம்பழம் சாப்பிடலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.
இருதய செயல்பாடு:
இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நல்லதாகும். தினமும் மூன்று பேரிச்சம் பழமும் சாப்பிடுவது உடலில் உள்ள கலோரி அளவை குறைக்கவும் இதய நோய் வராமல் காப்பாற்றவும் உதவுவதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கெட்ட கொழுப்பு எனப்படும் LDL கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | விந்தணுவில் உயிர் வாழும் கொரோனா வைரஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மூளைக்கு நல்லது:
நமது மூளைக்கு நன்றாக செயல்படுவதற்கு மூல காரணமாக இருப்பது நான் சாப்பிடும் உணவில் இருக்கும் நியூட்ரியன் சத்துக்கள்தான் எனக்கூறப்படுகிறது. அந்த வகையில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ள பேரிச்சம் பழங்களை சாப்பிடும் போது மூளையில் உள்ள நரம்புகள் சரியாக இயங்கும் என்று கூறப்படுகிறது. நினைவுத்திறனும் இதனால் அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
எலும்புக்கு வலு சேர்க்கும்:
நமக்கு வயது ஏற ஏற நமது எலும்புகளும் வலுவிழக்க ஆரம்பிக்கலாம். பேரிச்சம்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் உள்ளிட்ட இயற்கை சத்துக்கள் இருக்கின்றன. எலும்புகளை வலுவாக்க உதவுவதாக கூறப்படுகிறது.
ரத்த சர்க்கரை அளவு:
சர்க்கரை நோய் இருப்பவர்கள் கூட பேரிச்சம்பழத்தை தங்களின் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு கருத்து உலாவி வருகிறது. இது உண்மைதான் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். இதில் இருக்கும் இயற்கை சர்க்கரை, ரத்ச சர்க்கரை அளவை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சட்டு புட்டுன்னு எடை குறைக்கணுமா? அதுவும் ஒரே வாரத்துல.. இதை மட்டும் செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ