காலிஃபிளவர் பக்கவிளைவுகள்: காலிஃபிளவர் என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு காய்கறி. குளிர்காலத்தில் புதிய மற்றும் நல்ல காலிஃபிளவர் கிடைக்கும். காலிஃபிளவர் குருமா, பக்கோடாக்கள், பிரியாணி என இந்த குளிர்கால காய்கறியை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். உண்பதற்கு சுவையானது மட்டுமின்றி உடல் நலத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் காலிஃப்ளவரில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி, வைட்டமின்-சி, புரதம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன.
ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும் காளிஃப்ளவர் சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதோடு, சில நோய்கள் பாதித்தவர்கள், இதை உட்கொள்வது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். எந்தெந்த நபர்கள் காலிஃபிளவர் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
வாயு மற்றும் அமிலத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்கள்
காலிஃபிளவரில் சில கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, அவை எளிதில் உடைந்து போகாது. இதன் காரணமாக வயிற்றில் வாயு உருவாகத் தொடங்குகிறது அல்லது வயிற்றில் வீக்கம் ஏற்படத் தொடங்குகிறது. எனவே, வாயு அல்லது அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் காலிஃபிளவரை சாப்பிடக்கூடாது. இதன் காரணமாக, செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அசிடிடி என்பது பலருக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக்கூடாது.
மேலும் படிக்க | அடிவயிற்று சதை சட்டுனு குறைய தினமும் இந்த மேஜிக் டீ குடிங்க
தைராய்டு நோயாளிகள்
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் காலிஃபிளவரை சாப்பிடக்கூடாது. இதனை உட்கொள்வது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்கும். இது உங்கள் T3 மற்றும் T4 ஹார்மோன்களை அதிகரிக்கலாம். எனவே, தைராய்டு நோயாளிகள் காலிஃபிளவரை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். காலிஃப்ளவரை சாப்பிட்டால், தைராய்டு சுரப்பினால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு வேறு பல மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
சிறுநீரக கல் பாதித்தவர்கள்
சிறுநீரக கல் உள்ளவர்கள் காலிஃபிளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காலிஃபளவரில் அதிக அளவு கால்சியம் உள்ளது, இது கற்கள் பிரச்சனையை அதிகரிக்கும். மேலும், காலிஃபிளவரின் அதிகப்படியான நுகர்வு உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும். எனவே, இந்த இரண்டு நோய் உள்ளவர்களும் காலிஃபிளவரை உட்கொள்ளக்கூடாது.
மேலும் படிக்க | எந்த ஒயின் உங்களுக்கு ஒத்துக்கும்? காபியில் எது பெஸ்ட்? கண்டறியும் செயற்கை நுண்ணறிவு
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள்
கர்ப்பிணிப் பெண்கள் காலிஃபிளவரை அதிகமாக உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கர்ப்ப காலத்தில் காலிஃபிளவரை அதிகமாக உட்கொள்வது மலச்சிக்கல், அமிலத்தன்மை அல்லது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். இது பெண் மற்றும் அவரது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இது தவிர, பாலூட்டும் பெண்களும் காலிஃபிளவர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக, உங்கள் குழந்தை வயிற்று வலியைப் பற்றி புகார் செய்யலாம்.
இரத்தம் உறையும்
காலிஃபிளவரில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், இரத்தம் படிப்படியாக கெட்டியாகத் தொடங்குகிறது. மாரடைப்பு ஏற்பட்ட பலர் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை உட்கொள்கின்றனர், எனவே அவர்கள் அதிகம் உட்கொள்ளக்கூடாது. காலிஃபிளவர் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், இவற்றில் ஏதேனும் ஒரு பிரச்சனை எதிர்கொண்டால், காலிஃபிளவரை சாப்பிடுவதற்கு முன்பு நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
மேலும் படிக்க | பலன் தரும் பப்பாளி பக்கவிளைவும் தரும், இவர்கள் கட்டாயம் சாப்பிடக்கூடாது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ